154
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன். அவன் நாடு தொண்டைநாடு. பல்லாபுரம் சென்னை காஞ்சிப் பகுதி. அங்கே தொண்டைமான் என்றும் பெயருடன் ஆட்சி செய்தலால் தொண்டைமான் என்பது அரசன் என்றும் பொருள் பெற்றது.
தோட்டி யானைமேல் இருந்து அதனைச் செலுத்துபவன்; தாண்டை மான் அவ் யானைமேல் உலாக் கொள்பவன். இவ்வியல் கருதிஅவர்கள் தோட்டி முதல் தொண்டைமான் வரை என்றனர். தோட்டி என்றும் அப்பொருள் மக்கள் வழக்கில் மாறிப் போய்விட்டது.
தோண்டித் துருவல்
து
உள்ளே என்ன இருக்கிறது என்பதை அகழ்ந்து பார்த்தல் தோண்டல் ஆகும். தோண்டிய இடத்தில் உள்ளவற்றை உன்னிப்பாக ஆராய்வது, குடைந்து பார்ப்பது ஆகியவை துருவல் ஆகும்.
சிலர் சில செய்திகளை வெளிப்படுத்தவே மாட்டார்கள். என்னென்ன வகையால் முயன்றாலும் அவர்கள் அச்செய்தியை வெளியிட மாட்டார்கள் அவர்களிடமிருந்து பலப்பல வினாவி, அம்மறு மொழியை ஆராய்ந்து மடக்கி மடக்கி வினாவி உண்மையை உரைக்கவைத்து விடுவர். அது தோண்டித் துருவுதல் எனப்படும். அவனிடம் மறைத்தால் எப்படியும் தோண்டித் துருவாமல் விடமாட்டான் என்பர்.
தோது வாது
தோது = = உதவியாக இருத்தல்
வாது = உதவியாக வாதாடுதல்
அவனையும் கூட்டிக் கொண்டு போனால் 'தோது வாதுக்கு’ உதவியாக இருக்கும் தனியாக ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடியும் எனினும்; தமக்காகப் பேச முடியும் எனினும் தோதுவாது; இருந்தால் ஒரு தென்பும், ஒர் உறுதியும் வாய்க்கும். ஆதலால் உதவத் தெரிந்த, பேசத் தெரிந்த ஒருவர் துணை வேண்டும் என்னும் வகையால் எழுந்த இணைச்சொல் து. இனி எனக்குத் தோதுவாதுக்கு யார்வந்து உதவுவார் என்று வருந்துவார் பலர். எதற்கும் ஒற்றையாளுடன் மற்றோர் ஆளும் இருத்தல் துணிவை உண்டாக்கல் தெளிவு.