இலக்கிய வகை அகராதி
அந்தாதித்தொகை (முடிமுதல் தொகை)
175
வெண்பாவால் ஆயினும் கலித்துறையால் ஆயினும் வேண்டிய பொருளைப் பற்றிப் பத்து, நூறு என்னும் தொகை பெற வரும் சிறுநூல், அவ்வவ் வந்தாதித்தொகை எனப் பெயர் பெறும். ‘அந்தாதி’ காண்க.
அநுராகமாலை (சிற்றின்பமாலை)
-
அநுராகம் சிற்றின்பவேட்கை. தலைவன், கனவின் கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இன்புற்றதைத் தன் உயிர்த் தோழனிடம் உரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவால் கூறுதல் அநுராகமாலை எனப்படும்.
66
—
(தொன்னூல், 283 உரை)
கனவின் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த் தினிதிற் புணர்ந்ததை இன்னுயிர்ப் பாங்கற்கு நனவில் உரைத்தல் அநுராக மாலை.
(இலக்கண விளக்கம். பாட்டியல். 104)
இஃதனுராகமாலை என்றும் எழுதப்பெறும்.
66
கனவில் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த் தினிமை யுறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப் பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக நேரிசைக் கலிவெண் பாவான் நிகழ்த்துதல் அனுராக மாலையாம் ஆயுங் காலே.
அம்மானை
வி
(முத்துவீரியம். 1048)
மகளிர் மூவர் அமர்ந்து, ஒருவர் ஒருவினாவை எழுப்ப, மற்றொருவர் அதற்கொரு மறுமொழிதர, வேறொருவர் அவ் னாவையும் விடையையும் தொடர்புறுத்தி உரைக்கப் பாடிக் காண்டு அம்மானைக் காய்விளையாடுவதாகப் பாடுவது அம்மானையாம்.
அம்மானைப் பாடல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. அது வரிப்பாடல் வகையைச் சேர்ந்ததாய் ‘அம்மானைவரி' எனப்படுகின்றது.