176
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
அம்மானைப் பாடல் ஐந்தடிகளை யுடையதாகவும், செப்பலோசையுடையதாகவும் அமையும்.
முன்னிரண்டடிகளும் முதலாமவள் வாக்காகவும், அடுத்த ரண்டடிகளும் இரண்டாமவள் வாக்காகவும், இறுதியடி ஒன்றும் மூன்றாமவள் வாக்காகவும் அமையும்.
ஒவ்
வாருவர் வாக்கின் நிறைவிலும் 'அம்மானை என்னும் சொன்முடிவிருக்கும்.
வ்
கலம்பகம் முதலிய இலக்கியங்களில் இடம்பெற்ற இவ் வம்மானை, பின்னே தனிநூல் வடிவுற்ற காலையில் யாப்பியல் மாறிப்போயநிலையும் அறிய முடிகின்றது.
எடுத்துக்காட்டு “இராமப்பையன் அம்மானை.'
66
வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை; ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை; சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை.
இச்சிலப்பதிகார அம்மானை வரிப்பாடலின் முதல் நான் கடிகளும் ஓரெதுகையாகவும், இரண்டாம் மூன்றாம் அடிகள் மடக்காகவும், ஐந்தாம்அடி எதுகை விகற்பத் தனியடியாகவும் எல்லா அடிகளும் அடியளவில் செப்பலோசை உடை யாகவும் இருத்தல் அறிக.
அமர்க்கள வஞ்சி
யவை
போர்க்களத்தில் மாண்டார் உடலையும், மற்றைக் கரி, பரிகளின் உடலங்களையும் காகம், கழுகு, நாய், நரி, பேய் முதலியன தின்று களித்தாடும் சிறப்பைக் கூறுதல் அமர்க்கள வஞ்சி எனப்படும். இதனைச் செருக்கள வஞ்சி என்றும் கூறுவர்.
66
விருத்தவகை பத்தான் விளம்பும் அதனைச் செருக்களம் எனவே செப்பினர் புலவர்.
وو
(பன்னிரு பாட்டியல் 319)
66
செருக்களங் கூறின் செருக்கள வஞ்சி."
(இலக்கண விளக்கம். பாட்டியல், 109)