உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்கூடல்

இலக்கிய வகை அகராதி

181

உலாப்போழ்தில், மகளிர் கூட்டத்திடையே, தன் காதல் மங்கை வருதல் கண்டு, அக்கூட்டத்தினின்று அவளை விலக்கிக், காமன் அன்ன தலைமகன் அவள் உறுப்புகளின் அழகினைப் புகழ்ந்துகூறிக் கூடுதல் ‘ஆண் கூடல்' என்பதாம்.

66

பவனிமின்னார் கூட்டமயற் பாவை வரல்கண்டு

திவளார நீக்கியெதிர் செவ்வேள் - அவளுறுப்புக் கூறல் ஆண் கூடல்.

ஆற்றுப்படை

- (பிரபந்தத் திரட்டு. 17)

பரிசு பெற்று வருவார் ஒருவர், பெறக் கருதிப் போவார் ஒருவரை வழியிடைக்கண்டு, தாம் பெற்ற வளத்தையும் அதனை அருளிய தலைவன், நாடு, ஊர், புகழ், கொடை முதலியவற்றையும் கூறிப் பரிசு பெற்று வர வழிப்படுத்துதல் (ஆற்றுப்படுத்துதல்) ஆற்றுப்படையாகும். இதனை,

66

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்.

என்று கூறும் தொல்காப்பியம் (பொருள். 91).

66

புரவலன் பரிசில் கொண்டு மீண்ட

இரவலன் வெயில்தெறும் இருங்கானத்திடை

வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்

பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்

புரவலன் நாடூர் பெயர்கொடை பராஅய்

ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை.

99

எனப் புலவரையும் இணைத்துக் கொண்டார் பன்னிரு பாட்டிய லுடையார் (320).

66

'ஓங்கிய அதுதான் அகவலின் வருமே.’

“புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே.