182
என
2 ஓ
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
யாப்பையும் உரைத்து புலவராற்றுப் படைக்கொரு விளக்கமும் தருகிறது அப்பன்னிரு பாட்டியல் (321-2)
66
புலவர்கள் வாழ்த்துநலம்,
நிறைந்த பொருநரைப் பாணரைக் கூத்தரை நீள்நிதியம் பெறும்படி ஆற்றுப்படுப்பன ஆசிரி யம்பெறுமே.
என்று நவநீதப்பாட்டியலும்,
66
ஆற்றுப் படையே அகவல் பாவால் விறலி பாணர் கூத்தரில் ஒருவர்
பரிசுக்குச் சென்ற பாவலர் புகழும்
கொடையும் கொற்றமும் வழியிடைக் கூறலே.”
என்று பிரபந்த தீபமும் ஆற்றுப்படை இலக்கணத்தை எளி வரக்கூறும்.
L
திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறு
பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பவை பழமையான ஆற்றுப்படை நூல்கள். சங்கப் பாடல்கள் வேறு சிலவற்றிலும் ஆற்று படையுண்டு. இவற்றுள் வரும் செய்தியைக் கொண்டே, ஆற்றுப் படை இலக்கணம் தோன்றியதெனலாம்.
மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசிரியர் ஆற்றுப்படை, தமிழ்மகள் ஆற்றுப்படை எனக் காலத்துக்கேற்ற புதுப் பொருட்கு இருப்பாகவும் ஆற்றுப்படை பெருகி வருகின்றது. ஆறெழுத்தலங்காரம் (ஆறெழுத்தில்)
திருமுருகன் ஆறெழுத்துகளைப் பற்றி நூறு பாட்டுப் பாடுதல் ஆறெழுத்தலங்காரமாம். ஆறு எழுத்து - சரவணபவ. தண்டபாணி அடிகள், ஆறெழுத்தலங்காரம் பாடியுள்ளார். அதிலுள்ள பாடல்கள் வாழ்த்துடன் நூற்றுமூன்று (103)
ஆனந்தக்களிப்பு (பெருமகிழ்ச்சி)
இரண்டடிகளாய் ஓரெதுகையுடையதாய், ஒவ்வோர் அடியும் மூன்றுசீர்களும் தனிச்சொல்லும், பின்னும் நான்கு சீர்களும் உடையதாய்ச் சிந்துநடையில் வருவது ஆனந்தக் களிப்பு எனப்பெறும். கடுவெளிச்சித்தர் ஆனந்தக்களிப்பும், வள்ளலார் ஆனந்தக்களிப்பும் காண்க.