66
இலக்கிய வகை அகராதி
கனவில் ஒருத்தியைக் கண்டு கலவி
199
இன்ப நுகர்ந்தோன் விழித்த பின்னவள் பொருட்டு மடலூர்வேன் என்பது கலிவென் பாவான் முடிப்ப துலாமட லாகும்.
99
(முத்துவீரியம். 1086)
உலா என்னும் பனுவலும், மடல் என்னும் பனுவலும், ஒருசார் இயைந்த தன்மையதாகப் பெறுதலின் ‘உலாமடல், எனப் பெற்றது. 'மடல் உலா' என மாற்றியியைப்பின் 'மடலூர்தல்' என்னும் பொருளே பட்டமையுமாகலின் ‘உலாமடல்' என்றா ராம். 'மடல்' காண்க.
உலாவணி
இசுலாமிய சமயச் சார்பால் தமிழ் இலக்கிய வகை பெற்ற பெருக்கத்துள் ஒன்று ‘உலாவணி'யாகும். இதனை 'இலாவணி' என்பது பெருவழக்கு.
உலாவணி பாடுதலில் தேர்ச்சி மிக்க புலவராகத் திகழ்ந் தவர் உறையூர் சித்திரகவி சையத் இமாம் பாவலர் ஆவார்.
66
உலாவணி என்ற சொல்தான் தற்போது இலாவணியாக மாறி வழக்கில் இருந்து வருகிறது. இல் + ஆ +அணி எனப் பிரித்துக் காட்டிப் பொருள் கூறுவாரும் உண்டு. உள்ளமெனும் வீட்டில் குடிபுகுந்த ஆத்மாவுக்கு அழகு சேர்ப்பது என்பதாகக் கருதுவார்கள்” என்பார் “மதனீ” (இசுலாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரைக்கோவை பக். 309).
‘எரிந்த கட்சி' ‘எரியாத கட்சி' என ஏசலிப்பும், காம னரிப்புப் பற்றியும் உலாவணி உண்டு என்பதை விளக்குவ தொரு நூல். அஃது, 'எரியாத கட்சி சிங்காரக் கேள்வி லாவணி' என்பது. அதனை இயற்றியவர் பட்டமும் பெயரும் 'தமிழ் நாடெங்கும் புகழ்பெற்ற காமதகனக் கண்டனக் கட்சிக் கவிக் கேசரி தஞ்சை முத்தமிழ் வித்துவ பாப்புதாசர்” என்பது.
மன்மதன் பண்டிகைக் கேள்வி:
66
காமன் பண்டிகை என்று வருடந் தோறும் காணும் மாசிப்பிறை கண்டவுடனே நீங்கள்