உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

ஆமணக்கு பேய்க்கரும்புத்தட்டை கொண்டு

அருமையுடன் நட்டுவைக்கோற் பிரியைச் சுற்றிப் பாமரர்கள் ராட்டி ஒன்றைத் தொங்கவிட்டுப்

பங்குனி மாதப் பருவமட்டும் அங்கே

நேமமதாய்க் கடலை மொச்சை தேங்காயிட்டு நெறியாகக் கொளுத்தச் சொன்ன புராணம் காட்டே.'

உலகில் மன்மதன் எத்தனை என்று ஒரு கேள்வியைப் போடுகின்றது அது.

66

மால்மகள் மதனென்குதொரு புராணம்

மலர்வேதன் மகனென்கு தொரு புராணம் பால்வண்ணன் மகனென்கு தொருபுராணம் பகர்தர்மன் மகனென்கு தொருபுராணம் சால்வண்ணன் மகனென்கு தொருபுராணம் சங்கல்பன் மகனென்கு தொருபுராணம் வேள்மதனித்தனை பேரைநூல் சொன்னாலே

வெந்தமதன் எந்தமதன் விளம்புவீரே!”

எரிந்த கட்சியைப் பாடிக் கெட்டழிந்தவர்களைக் கூறி, “பாப்பு தாசம் அறைவதைக் கேட்டு வாயை மூடு மூடு" எனப் புத்தகம் மூடுகின்றது.

இலாவணி வெண்பா, விருத்தம், இசைப் பாடல்களாக இயல்வதையும் தருக்க நெறியில் நடப்பதையும் இந்நூலால் அறியலாம்.

உழத்திப்பாட்டு

உழவர் புகழ் உலகறிந்தது; ‘உழவு' என்றோர் அதிகாரம் வள்ளுவர் வாய்மொழியாக இலக்குவதும், ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்னும் நூல்களைக் கம்பர் இயற்றியதும் உழவின் பெருமையை விளக்குவனவாம்.

66

'ஏரோர் களவழி' என்னும் தொல்காப்பியச் செய்தியும், ஏர்மங்கலம்' பாடும் பாடும் இளங்கோவடிகள் இசைச்செய்தியும் எண்ணத்தக்கன.

ரு

உழத்திப்பாட்டு என்னும் நூல்வகையைப் பன்னிரு பாட்டியல் (164) தருகின்றது. அதன் இலக்கணத்தை,