உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இலக்கிய வகை அகராதி

புரவலற் கூறி அவன்வா ழியவென்

றகல்வயற் றொழிலை ஒருமை உணர்ந்தனள் எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே.”

என்கின்றது.

பத்துப்பாட்டே

அளவாகவும்,

புரவலர்

201

புகழ்கூறி

வாழ்த்துவதும், உழுதொழில் திறம் கூறுவதுமே பொருளாகவும் இவ்வுழத்திப்பாட்டு சுட்டப்பெறுகின்றது. உழத்திப் பாட்டின் வளர்ச்சியே பள்ளு என்னும் நூலாம்.

'பள்ளு' பார்க்க.

உழிஞை மாலை

பகைவர் ஊர்ப்புறஞ் சூழ, உழிஞைப் பூமாலை சூடிப் படைவளைப்பதைக் கூறுவது உழிஞை மாலையாகும்.

“மாற்றார் ஊர்ப்புறம் வளைதர உழிஞை வனைந்து காலாள் வளைப்பது கூறல் உழிஞை மாலையாம் உணருங் காலே."

“உழிஞை மாலையே ஒன்னலர் ஊர்ப்புறம் ஒருங்குடன் வளைக்க உழிஞைத்தார் சூடிப் படைசெலும் பண்பைப் பகர்தல் என்ப.

(முத்துவீரியம். 1076)

- (பிரபந்த தீபம். 13)

முப்பது பாடல்களையுடையது உழிஞைமாலை எனப் பிரபந்த மரபியல் கூறும்.

"முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் றாகும் என்ப.

என வரும் தொல்காப்பியம் (1011) இவண் கருதத்தகும்.

உற்பவ மாலை (பிறப்பு மாலை)

திருமால் பிறப்புப் பத்தினையும் பத்து அகவல் விருத்தத்

தால் பாடுவது உற்பவ மாலை எனப்பெறும்.