உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

5

பொழிவு வாய்ப்பு (1984). அவ்வாய்வு, இணைச் சொல் தொகையை, ஏறத்தாழ இரட்டிப்பு ஆக்க உதவியது. அவ் விரட்டிப்பு மேலும் இரட்டிப்பும், இரட்டிப்பின் இரட்டிப்பும் ‘தமிழ் வளம்' உண்டு! செந்தமிழ்ச் சொல்வளம் அத்தகு சீர்த்தமை சான்றது!

நெஞ்சில் நிறைந்து கிடக்கும் இணைச் சொல் வளம், தமிழ் நிலத்து வைப்பாகக் கிடக்கும் வண்ணமும் நடக்கும் வண்ணமும் உதவிய கெழுதகைக் கேண்மையர் முழுநூறு மன்பர் கழக ஆட்சியர் திருமிகு

இரா.முத்துக்குமாரசாமி

அவர்கள் ஆவர். அவர்களுக்குப் பெருநன்றியன்!

தீரா இன்பத்திலேயே என்றும் திளைக்க வைக்கும் தீந்தமிழ்த் தொண்டுக்கென்றே என் வாழ்வை அருளிய திருவருளையும், திருவருள் வாழ்வை என் பெற்றோரையும் நினைந்து உருகு கின்றேன்! பெற்றமை-பேணி வளர்த்தமை-என்பவை கருதியோ? இவை பெற்றோர்க்கெல்லாம் பொதுமைப் பான்மைய! தனித்துச் சுட்டும் தகைமைய வல்ல!

என்னுயிர் அன்னையார் வாழவந்தாள்!

என் தவத் தந்தையார் படிக்கராமர்!

என்

அன்னையார்-என் இளமைப் பருவத்திலேயே- சொல்லச் சொல்லக் கேட்டுக் கேட்டுச் சுவைத்து, நெஞ்சக் களஞ்சியத்தில் நிரம்பிக்கிடந்தனவே ஆறு மணிப் பேருந்துச் செலவுப் பொழுதில் இரு நூற்றைம்பதுத் ததும்பி வழிய வைத்ததாம்! அவரை, அசைய அசையாய் அசை போட வைத்துள்ள இவ் விசை நூலில் அவர் பெயரை இசைவித்தல் என்னுயிர்க் கடனே யன்றோ?

ஏக்கர்,

காலடியால் கணக்காக அளந்து இத்தனை இத்தனை 'செண்டு; இத்தனை 'இலிங்கிசு லிங்கிசு' என்று அறுதியிட்டு உரைக்கவும், நான்கு எண் தொகையை நான்கு எண்

தொகையால் பெருக்கி, அப் பெருக்கத்தைப் பெருக்க எண்ணால் பெருக்கவும் துண்டுத் தாளும் கொள்ளாமல் நெஞ்சத் தாளில் வரைந்து சொல்லவும், சில ஆயிரம் பாடல்களைத் தொடர்ந்து நினைவிலிருந்து சொல்லிப் பொருள் விரிக்கவும், 'வாய்மைக்கு இவரே' என வியக்கவும் வாழ்ந்த உழவராவும் படிக்கராமர் எந்தையார்! அவர் தந்த தந்தைமை இன்றேல், இத்தாய் தமிழ்த் தொண்டு எளியனுக்கு வாய்க்குமோ!