உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

முன்னடி நான்கு சீர்களையுடையதாகவும், இறுதியடி இருசீர்களையுடையதாகவும் எதுகைத் தொடையுடன் அமைந்து, ‘தங்கமே' என்னும் தனிச் சொல்லுடனும், எடுப்புடனும் முடியும். தங்கச்சிந்து இரண்டடிமுதல் பல அடிகளாகவும் வரும்.

தசப்பிராதுற்பவம் (பதின் பிறப்புமாலை)

உற்பவமாலை காண்க.

தசமணிமாலை (பதின்மணிமாலை)

வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமும், பத்துவர அந்தாதியாகப் பாடுதல் தசமணிமாலையாம்.

நவமணிமாலை காண்க.

தசாங்கத்தியல் (பதினுறுப்பியல்)

அரசன் தசாங்கத்தை ஆசிரிய விருத்தம் பத்தினால் கூறுவது தசாங்கத்தியலாகும். தசாங்கம் இவை என்பதைத் தசாங்கத்தில் காண்க. இதனைத் தசாங்கத்தயல், தசாங்க வன்னிப்பு என்பதும் உண்டு. வன்னிப்பு = வண்ணிப்பு.

66

'அரசன் தசாங்கம் ஆசிரிய விருத்தம் ஐயிரண் டறைவது தசாங்கத் தயலே.'

தசாங்கம் (பத்துறுப்பு)

- (முத்துவீரியம். 1102)

அரசனது பத்து அங்கங்களையும், பத்து நேரிசை வெண்பாக் களால் பாடுவது தசாங்கமாகும். தசாங்கப்பத்து என்பதும் இது.

66

நேரிசை வெண்பாவான் நிருபன்பெறு

தசாங்கத் தினைச்சொலல் தசாங்கப் பத்தாம்.”

(இலக்கண விளக்கம் பாட்டியல்.80).

தசாங்கங்கள் இவை என்பதை,

66

மலையே யாறே நாடே ஊரே

பறையே பரியே களிறே தாரே

பெயரே கொடியே என்றிவை தசாங்கம்.”

(LGOT 60fl. 240)

என்பதால் அறிக.