உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

277

இவ்விலக்கணம் அமையப் பாரத தேவிக்குத் திருத் தசாங்கம் பாடியுள்ளார் பாரதியார். இது புதுவகையினதாகும். தடாகசிங்காரம் (பொய்கைஎழில்)

தலைவன் உலாவரல், சோலையிலும், மலர்ப்பொய்கையிலும் உலாவுதல்; மின்போலும் கன்னியொருத்தியைக் காணல், இருவரும் மையலுறல், மகிழ்தல் ஆகியவற்றையெல்லாம் பாடல்

தடாகசிங்காரமாம்.

66

மன்பவனி சோலை மலர்மலி வாலிவர

மின்னொருத்தி மின்போல் வியனெய்தக் - கன்னிக்கு

இறைமோகத் தாற்சோலை ஏற்றவெலாம் பாடல் அறியுந் தடாகசிங்கா ரம்.”

தண்டகமாலை (புணர்ச்சிமாலை)

- (பிரபந்தத்திரட்டு 12)

வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூறுவது தண்டக மாலையாகும். வெண்புணர்ச்சிமாலை என்பதும் இது. பாவகை, வெண்பா; பொருள்வகை, புணர்ச்சி; ஆகலின் வெண் புணர்ச்சி மாலை என்றார்.

66

வெண்பா வான்முந் நூறு விரிப்பது தண்டக மாலையாம் சாற்றுங் காலே.'

தமிழ் சொரி சிந்தாமணித்தொகை

- (முத்துவீரியம். 1068)

ஒரு கதையை எடுத்துக்கொண்டு தமிழ்நலமெல்லாம் கெழும முடிமுதல் (அந்தாதி) அடைவால் பாடுதல் தமிழ் சொரி சிந்தாமணித் தொகை எனப்படும்.

66

அந்தாதிப் பாக்கதை யாதல் தமிழ்சொரி சிந்தா மணித்தொகை யாம்.

தரும விசேடம் (அறச்சிறப்பு)

- (பிரபந்தத்திரட்டு 44)

வஞ்சித் தாழிசை யாப்பால் முப்பத்திருவகை அறங்களையும் எடுத்துரைத்தல் ‘தருமவிசேடம்' என்னும் இலக்கிய வகையாம்.