உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

இனித் தூசிப் படையைப் புகழ்ந்து வகுப்பால் ஒன்பது கவி பாடுவது தாரகைமாலை என்பார் வெண்பாப் பாட்டியலார்.(32)

தாலாட்டு

நாற்சீர் ஈரடி ஓரெதுகைக் கண்ணிகளாகத் தாலாட்டுப் பாடல் வரும். சீராமர் தாலாட்டு முதலியவை இவ்வகையில் அமைந்த நூல்களாம்.

“பேராம் அயோத்திப் பெருமானைத் தாலாட்டச்

சீரார் குருகையர்கோன் சேவடிகள் காப்பாமே.”

அல்லி அரசாணிமாலை, பவழக்கொடிமாலை, இவ்வகைக் கண்ணிகளால் வருவனவேயாம். இவை மாலை எனப் பெயர் பெறுவதைக் கருதி அந்தாதி எனக் கொள்ள வேண்டுவதில்லை. தொடர்கதை, தொடர்ந்து வரும் பாடல் என்னும் பொருளில் வருவது இம்மாலையாகும். பெரியாழ்வார் பாடிய கண்ணன் திருத்தாலாட்டு கவின் மிக்கது. கவிமணி பாவேந்தர் முதலிய வர்கள் பாடிய தாலாட்டுகள் புதுமணம் கமழ்வன. தாய்மார் வளர்த்த தமிழ் தாலாட்டாம்.

தாழிசை மாலை

தாழிசையால் பாடப்படுவதொரு நூல் தாழிசை மாலை. திருச்சிராப்பள்ளி, ‘சக்தி தாழிசைமாலை' தண்டபாணி அடிக ளால் பாடப்பட்டது. அதில் 34 தாழிசைகள் உண்டு.

தானைமாலை.

அகவல் ஓசையிற் பிறழாது அரசர்க்குரிய ஆசிரியப் பாவால் முன்னர் எடுத்துச்செல்லும் கொடிப்படையைச் சொல் வது தானைமாலையாகும்.

66

66

ஆசற உணர்ந்த அரசர் பாவால்

தூசிப் படையைச் சொல்வது தானை மாலை யாகும்.

(இலக்கண விளக்கம் பாட்டியல் 109)

அகவலோ சையிற்பிற ழாதகவ லின்முனர் எடுத்துச்செல்லுங் கொடிப்படை இயம்பல் தானைமா லைப்பெயர் தழுவுமா மெனவே."

(முத்துவீரியம். 1166)