இலக்கிய வகை அகராதி
திக்குவிசயம் (திக்குவெற்றி)
283
எட்டுத்திக்கும் படைகொண்டு சென்று, பகைவரை வெற்றி கொண்ட சிறப்பைப் பாடுவது திக்குவிசயம் என்பதாம்.
கடிகை முத்துப்புலவரால் 'திக்குவிசயம்’ பாடப்பட் டுள்ளது. அது ‘சிவகிரி வரகுணராம பாண்டிய வன்னியனார் திக்குவிசயம்' என்பது.
66
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்."
என்பது போலும் புகழ் நாட்டத்தால் முழுதாளும் முனைப்பு மீக்கூந்தார்க்கு எழுந்த திசைவெற்றிப் பாட்டின் வழிவந்த சிற்றிலக்கிய வகை இது.
திரட்டு
ஒருவர் பாடிய பாடல்களைத் திரட்டிய நூலோ, பலர் பாடிய பாடல்களைத் திரட்டிய நூலோ திரட்டு என்று வழங்கப் பட்டன. முன்னே 'தொகை' என்று வழங்கிய ஆட்சியைத் ‘திரட்டு’ ஏற்றுக்கொண்டது பின்னே எனலாம்.
குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, சிவஞான முனிவர் பிர பந்தத்திரட்டு என்பன போன்றவை முதல்வகையின. தனிப்பாடல் திரட்டு; பல பாடல் திரட்டு என வழங்குவன அடுத்த வகையின.
இனித் ‘தெருட்டு' என்பதொரு நூல்வகையுண்டு. அது ‘நீலகேசித் தெருட்டு' என்பதால் விளங்கும். 'தெருட்டு' என்பது தெளிவிப்பது என்னும் பொருளது.
திரட்டு என்பது ‘தெரிவு' என வழங்கப்பெற்றமை சுவடி களால் அறிய வருகின்றது. தெரிந்தெடுக்கப்பட்ட பாடல் களையுடையது என்பது பொருள்.
புறத்திரட்டு, பன்னூற்றிரட்டு என்பவை அரிய திரட்டு நூல்களாம். தொகை காண்க.
திரிபந்தாதி (திரிபு முடிமுதல்)
அடிதோறும் முதற்சீர் முதலெழுத் தொன்று மட்டும் அளவால் ஒத்துத் திரிந்து நின்று பிறவெழுத்துக்களது தொகுதி