இலக்கிய வகை அகராதி
“ஒன்பது பதினொன் றென்பது காப்பே."
331
(பரணர்)
- (பன்னிரு. 188)
னி வேறு வகைப்பாவால் பிள்ளைத்தமிழ் பாடுதற்கு நேர்ந் தாரும் ஒரு சார் ஆசிரியருளர். அவர் கூறுமாறு:
66
وو
"அகவல் விருத்தமும் கட்டளை ஒலியும் கலியின் விருத்தமும் கவின்பேறு பாவே.’ “பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத் தெள்ளிதிற் செப்பும் புலவரும் உளரே.’
―
وو
( பன்னிருப் பாட்டியல். 189,190)
முதற்கண் எடுக்கப்பெறும் அகவல் விருத்தம் நான்கடிக்கும் எழுத்தின் பகுதி எண்ணிக்கொள்ளவேண்டும் என்றும், எழுத் தொப்பப்பாட வேண்டும் என்றும் கூறுவர்.
66
"முதற்கண் எடுக்கும் அகவல் விருத்தம்
எழுத்தின் பகுதி எண்ணினர் கொளலே.”
―
(பன்னிரு. 191. இலக்.கண விளக்கம் பாட்டியல். 51 மேற்)
பருவத்திற்குரிய பாடல்கள் ஒற்றைப்படப் பாடுதல் சிறப் பென்றும், இரட்டைப்பட வருமாயின் ஓசை பெயர்த்துப் பாடுதல் வேண்டும் என்றும் கூறுவர்.
காப்புப்பருவத்தின் முதற்பாடல் திருமாலைப் பற்றிய தாதல் வேண்டும். அவன் காவற் கடமை பூண்டவன் ஆதலாலும், திருவின் கிழத்தியின் கேள்வன் ஆதலாலும் பிறவற்றாலும் அவனை முற்படக்கூறித் தொடங்குதல் முறையென்பர். பின்னே இவரிவரைக் கூறுக என்றும் வரைந்து கூறுவர்.
“காப்பின் முதல் எடுக்கும் கடவுள் தானே பூக்கமழ் துழாய்முடி புனைந்தோ னாகும்.
“மங்கலம் பொலியும் செங்கண் மாலே சங்கு சக்கரம் தரித்த லானும்
(பரணர் பாட்டியல்)
(நவநீதப் பாட்டியல். 26)