உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

25

நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர். அந்நிலையில் ஆறுதல் - தேறுதலாய் அமைவார் அரியரும் அருமையருமாம் “கெட் காலை விட்டனர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை நன்று” என்பது பெருங்கதை. இளைப்பாறுதல், களைப்பாறுதல், ஆகியவற்றினும் ஆறுதல் அருமையே! தேர்வுகளில் தேறுவாரும் முதன்மையில் முதன்மையாய் தேறுவாரும் மனத்தில் தேறுதல் கொண்டாராய் காணல் அருமையே!

இசகுபிசகாக ஏமாறுதல்

இசகு (இசைவு)

மன

ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்.

பிசகு (தவறு)

தன் அறியாத்

ஏமாறுதல்.

தன்மையாகிய தவற்றால்

எந்த ஒரு குற்றத்திலாவது வன்பு துன்புகளிலாவது மாட்டிக் கொண்டவர், 'இசகுபிசகாக மாட்டிக்கொண்டேன்' என்பது வழக்கு. வெள்ளறிவுடையான் பிறர் ஏமாற்றுக்கு ஆட்பட்ட போது அவனைப் பிறர் இசகு பிசகாக ஏமாறிப் போனான் என்பதும் வழக்கு.

ஒருவரைத் தம்பால் வயப்படுத்தி அவரிடம் உள்ளவற்றைத் தட்டிப் பறித்தற்குத் தணியா ஆர்வமுடையவர் என்றும் உண்டன்றோ? அவர்க்கு வயப்பட்டு உள்ளதை உரியதை இழந்து ஓலமிடுவாரும் என்றும் உண்டன்றோ!இவர்கள் வழியாக வழங்கப் பெறும் இணைச் சொல் இது.

இட்டடி முட்டடி

இட்டடி

முட்டடி

இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்கும் கூட இடைஞ்சலான இடம்.

முட்டு அடி, முட்டடி; காலின் மேல் வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம்

ட்டடி முட்டடியான இடம்' என்பதில் இப்பொருள் உண்டாயினும் இட்டடி முட்டடிக்கு உதவுவான்' என்பதில் இதன் நேர் பொருள் இல்லாமல் வழிப் பொருளே உண்டாம்.