26
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2 ♡
ட்டடி என்பது, தம் கையில் எதுவும் இல்லாத நெருக்கடியையும், முட்டடி என்பது எவரிடத்துக் கேட்டும் எதுவும் பெற முடியாத முட்டுப் பாட்டையும் குறித்தனவாம். அந்நிலையிலுள்ள போதும் உதவுபவனை ‘உதவுவான்' எனப் பாராட்டுவர். முட்டுப்பாடு இட்டடி முட்டடிக்கு-வறுமை. அது எதுவும் கிட்டுதற்கு இல்லாமல் முட்டுதல் வழியாகத் தந்தது. தட்டுப்பாடும் அது.
இடக்கு முடக்கு
இடக்கு - எளிமையாக இகழ்ந்து பேசுதல்
முடக்கு
கடுமையாக எதிரிட்டுப் பேசுதல்
நகையாண்டியாக இருப்பவனை இடக்கன் என்பதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடு செல்லாமல் ‘குணங்கினால்' இடக்குச் செய்கிறது என்பதும் வழக்கு. அவையில் சொல்லக் கூடாத சொல்லை மறைத்துச் சொல்வது இடக்கர் அடக்கு
முடக்கு, மடக்கு என்னும் பொருளதாம். மடக்கி எதிர்த்துப் பேசுதல் மடக்கு என்றும் முடக்கு என்றும் ஆயிற்று. முடக்குதல் மேற்செல்ல விடாமலும் சொல்லவிடாமலும் தடுத்தலாம். எதிரிட்டுத் தடுத்தல் மடக்குதல் என வழங்குவதும் அறிக. இடுக்குமுடுக்கு
இடுக்கு முடுக்கு
―
மிகக் குறுகலான வழியும் , தெருவும்.
மிகக் குறுகலானதும் பல இடங்களில் முட்டி முட்டித் திரும்புவதும் ஆகிய வழியும் தெருவும்.
இடுங்கிய கண்ணாக்கிவிட வல்லிதாம் வறுமை ‘இடுக்கண்’ எனப்பட்டதனை எண்ணுக இடுக்கிப் பொறியை எண்ணினால் இதன் பொருளமைதி நன்கு தெளிவாம். முக்குத் தெரு, முடுக்குத் தெரு என்பவனைற்றையும், முட்டி, முடங்குதல் என்பவற்றையும் எண்ணுக.
இணக்கம் வணக்கம்
ஒருவர் குணத்திற்குத் தக இணங்கிப் போதல்.
இணக்கம்
வணக்கம்
பணிந்த
மொழியும் வணங்கிய
அமைந்து போதல்.
கையுமாக