இணைச்சொல் அகராதி
வ
27
இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத் தாலும் வயப்படுத்தலாம்; இணக்க வணக்கம் இரண்டும் உடைய ஒருவர் எவரையும் வயப்படுத்துதல் எளிமையாம்.
ய
இணக்க வணக்கம் உண்மையாக இல்லாத நிலையில் அவற்றால் விளைந்துள்ள தீமைகளுக்கு எல்லையே இல்லையாம்! “தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து”என வள்ளுவர் எச்சரித்தார். (குறள் 838) இதம்பதம்
இதம்
பதம்
―
இனிமையாகப் பேசுதல்
பக்குவமாகப் பேசுதல்
இதம் என்பது இனிமையையும் இனிய சொல்லையும் சுட்டும். இதமாகப் பேசுதல் என்பது கேட்பவர் விரும்பப் பேசுதலாம்.
பதம் என்பது பக்குவம். வேக்காட்டு நிலையைப் பார்த்தல் பதம் பார்த்தல் என்பதும், விளைவை அறுக்கும் பதமாக இருக்கிறது என்பதும் கருதுக. இனி, கடைந்து பக்குவமாகத் திரட்டப்பட்ட வெண்ணெய் பதம் எனப் படுவதையும், பதனீர் உண்மையையும் கருதுக.
புகும்வேளை சரியாக இருக்க வேண்டும் என்னும் குறிப்பில் ‘பதனன்று புக்கு' எனவரும் புறப்பாட்டு.
இராப்பாடி பகற்பாடி
இராப்பாடி
இரவில் பாடிக் கொண்டு வரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக்காரன்.
பகல்பாடி பகலில் உழவர் களத்திற்குப் பாடிக் கொண்டுவந்து தவசம் பெறும் புலவன், களம் பாடி என்பவனும் அவன்.
இராப்பாடி ‘யாமக் கோடங்கி' எனவும் பெறுவான். அவன் நடை உடை தோற்றம் சொல் ஆகியவை கண்டு அஞ்சினராய், அவன் கூறும் குறிச்சொல்லைக் கேட்கும் ஆர்வலராய்க் கதவு சாளரப் புறத்திலிருந்து மறைந்துக் கொண்டு கேட்கும் வழக்கம் உண்டு. நேரில் காசு தவசம் தராமல் மறைவில் இருந்துக் கொண்டே கதவுக்கு வெளிப்புறத்தில் சுளகில் வைத்து எடுத்துக்