உள்ளது உரியது
உள்ளது
―
இணைச்சொல் அகராதி
33
கையில் உள்ள பொருள்; தங்கம், வெள்ளி, பணம் முதலியன.
உரியது
―
மனை,
நிலம் முதலிய உரிமைப் பொருள். விலைமானம் தந்து
வழிவழியுரிமையாகவோ
வாங்குதல்
உரிமையாகவோ வந்த பொருள்.
உள்ளது உரியதை விற்றாவது செய்ய வேண்டியதைச் செய்து தானே தீர வேண்டும். என்பது இதெனினும் உச்சமானது 'வில்லாததை விற்றாவது கொடு' என்பது. “வில்லாதது" என்பது தாலி! விற்காததை வில்லாததை என ஆயிற்று.
மனை, நிலம் முதலியன விற்பார் வாங்குவார்க்கு, “இதனை வழி வழியாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர்களாகவும்” என உரிமைப் படுத்தும் உறுதிமொழி எழுத்து வழியாகத் தருதல் அதன் உரிமையைத் தெளிவாக்கும்.
உளறுதல் குழறுதல்:
―
உளறுதல் பொருளறிவுரா முதியர் பேச்சு
குழறுதல் பொருளறிவுராக் குழவியர் பேச்சு
வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும்.
உளறுதல் பழிப்புக்கு இடமாகும். குழறுதல் இளையரிடத் திருந்து வருங்கால் ‘குழலினும் யாழினும் லினும் யாழினும் இனி' தெனத் துறவோராலும் கொள்ளப்படும்.
உற்றார் உறவினர்:
உற்றார்
குருதிக் கலப்புடையவர் உற்றார்.
உறவினர் குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த
உறவினர்.
உற்றார்- உடன் பிறப்பாக அமைந்தவர்; உறவினர் பெண் கொடுப்பால் உறவாவர். உறுதல்-நெருக்கமாதல்.