உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

உத்தியார்

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

ஒத்த திறமுடைய இருவர் உத்தியார்.

உரியார்- இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார். “மணலைக் கயிறாகத் திரித்தவன் வேண்டுமா? வானத்தை வில்லாக வளைத்தவன் வேண்டுமா?" என்று தலைமை ஆட்டக்காரனிடம் உத்தியாக வந்தவர் கேட்பார். அவன் எவனென்று சொல்கிறானோ அவன் தங்களுக்கு முன்னே பேசி வைத்துக் கொண்ட பெயர்ப்படி உத்தியாகப் போவான். உப்புச் சப்பு

உப்பு

சப்பு

- உப்புச் சுவை

விரும்பத்தக்க மற்றைச் சுவைகள்.

உப்புச் சப்பு இல்லாமல் இருக்கிறது என்று சுவையற்ற உணவைக் குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மை கருதி அதனை முன்னர்க் குறித்து, மற்றைச் சுவைகளைப் பின்னர்க் குறிப்பர். சப்பு சாப்பிடுதலின் மூலம். சுவையானவற்றை விரும்பி யுண்ணுதல் உயிரிகளின் பொதுவியல்பு. முற்றுந்துறந்த துறவியரும் சுவைக்கு அடிமையாதல் உண்டெனின் பிறரைச் சொல்வானேன். செவிச்சுவை விரும்பாராய் அவிச்சுவை விருப்பாளரை மாக்கள் என்பார் வள்ளுவர். (குறள் 420) ஆனால் அவரும் ‘உப்பமைந்தற்றால் புலவி' என்பார்.

உருட்டு புரட்டு

உருட்டு

புரட்டு

ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல்.

ஒன்றை நேர்மாறாக அல்லது

மாற்றிவிடுதல்.

தலை கீழாக

உருளல் புரளல் வேறுபாட்டைச் சாலைச் சீர் உருளை உருளற்கும், கற்றூணைப் புரட்டற்கும் உள்ள வேறுபாடு கண்டு தெளிக.

கற்றூணைப் புரட்டுவார் அத்தூணுக்குக் கீழே உருளைகள் வைத்து எளிதாகப் புரட்டிச் செல்லுதல் அறிக.

உருளல் புரளல் என்பவை ஏமாற்றுக் கருவியாய் உருட்டுப் புரட்டெனச் சொல்லப்படுகின்றனவாம். உருட்டினும் புரட்டு, சிக்கல் மிக்கதாம்.