ஈவு இரக்கம்
ஈவு
இரக்கம்
இணைச்சொல் அகராதி
31
―
கொடை கொடுத்தல்.
அருள் புரிதல்.
சாதல், ‘சாவு’ என ஆவது போல் ஈதல் ‘ஈவு’ ஆகியது.பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்துவாரைக் கடிகின்றது புறப்பாடல். (127)
இரக்கம் என்பது அருள் என்னும் பொருளாதல் வெளிப்
படையாம்.
'ஈவிரக்கமில்லாத பாவி' எனப் பிறர்க்கு உதவானைப் பழித்தல் எவரும் அறிந்த செய்தியே.
இறைவன் அருளும் ஈவும், கணக்கில் பங்கிட்டுத்தரும் ஈவும் இவண் எண்ணுக.
ஈவுதாவு
ஈவு
தாவு
கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே.
தாழ்வு
என்பது பணிவு என்னும் பொருளது; என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல. மலையடிப் பள்ளத் தாக்குகளையோ’ பிற பள்ளங்களையோ தாவு என்பது வழக்கு. 'மேடு தாவு’என முரண் தொடையாகவும் வழங்கும். தாவு
தணிவு இங்கு தணிவு; என்பது ஒருவர் நிலைக்குத் தணிந்து சென்று அவர்க்குப் பணிவுடன் உதவுதலைக் குறித்து வந்தது. ஈவார்க்குத் தாவும் வேண்டும் என்பதை ‘எவ்வம் உரையாமை ஈதல்' என்பார் வள்ளுவர்.
உத்தியார்உரியார்
சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது.
ஒற்றைக்கு ஒற்றையை ‘உத்திக்கு உத்தி' என்பர்; ஒத்தவன் ஒத்தியாகி ‘உத்தி’யானான். ஓத்தைக்கு ஒத்தை என்பதும் உண்டு.