உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

ஒழுவாய் நீர் வழியும் ஓட்டைவாய்.

47

ஓ-ஓவுதல்; ஓவுதலாவது, ஒழிதல், நீங்குதல் என்னும் பொருட்டது. பல் ஒழிந்து இடைவெளிபட்டுப் போனவாய் ஒவாய் எனப்படும்.

ஒழுவாய்-ஒழுகும் வாய், ஒழுவாய் என நின்றது. பல் போய் பின்னர்த் தடையின்றி நீர் ஒழுகுதல் உளதாகலின் ஒழுவாய் எனப்பட்டது.

'ஓவாயன் ஒழுவாயன்' என்பவை நகையாண்டிப் பெயர்கள். பெயர்களாக நிலைத்தாரும் உளர். “போவாய் பொழுவாய்”

காண்க.

கக்கல் கழிச்சல்:

கக்கல்

கழிச்சல்

வாந்தியெடுத்தல்.

வயிற்றோட்டம் போதல்

ஒருவரைக் ‘கக்கல் கழிச்சல்' ஒரே வேளையில் இருந்து வாட்டினால் அதனை 'வாந்தி பேதி' என்பர். பேதி’ வயிற்றோட்டமாம்.

கழிதல்

-

மிகுதல், விட்டுப் போதல், அகலுதல் என்னும் பொருளுடையது. கழிவதைக் கூட விட்டு விடலாம். ஆனால் நாளையும் பொழுதையும் வீணே கழிப்பாரை ‘என்ன பிறவி?' என்று ஏசாமல் தீராது! இத்தகையரைத் தானோ ‘கழிசடை' என்பது!

கக்கலும் விக்கலும்

கக்கல்

விக்கல்

வாந்தியெடுத்தல்

குடலுக்குச் செல்லாமல் தொக்கிக் கொள்ளுதல்.

கக்கலில் ஒலியுண்டாகும்; விக்கலில் திணறலுண்டாகும். னி விக்கல் நீர் வேட்கையால் உண்ட ஒலியுண்டாம்.

உண்டாவதாயின் அதற்கு

கக்கல் ‘கக்குவான் நோய்' என ஒரு நோயாகக் குழந்தைகளை ஆட்டிப் படைப்பதுண்டு.விக்கலும் நோயாக முதியவர்களை வாட்டுவதுண்டு. முடியாத நிலையில் படுத்தவரைக் “கக்கலும் விக்கலுமாகக் கிடக்கிறார்; எப்பொழுதோ தெரியாது” எனக் கைவிரிப்பதுண்டு.