48
கங்குகரை: கங்கு
கரை
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
எல்லை முடிவு-
எல்லை முடிவுக்கு அடையாளமாம் வரம்பு.
‘கங்கு கரை இல்லை’ ‘கங்குகரை காணாத கடல்' என்பவை கங்குகரை இணையைச் சுட்டும். கங்கும் இல்லை; கரையும் இல்லை என்று கொள்க.
கங்காவது ஓர் எல்லையின் கடைசி; கரையாவது அக்கடைசி எல்லையில் வைக்கப்பட்ட வரப்பு அல்லது கரை.
கஞ்சிதண்ணீர்:
கஞ்சி
தண்ணீர்
நீராளமாகக் காய்ச்சப் பெற்ற பொறுக்கும் நீரும். சோற்றில் விட்டு வைத்துக் காடியான நீர்.
கஞ்சி, அன்னப்பால் எனப்படும். “அன்னப்பால் காணாத ஏழைகட்கு நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்குமம்மா?” என்பது வறுமையர் வினா? கஞ்சிப்பசை, கஞ்சிக் கலயம், கஞ்சித்தொட்டி என்பவை எவரும் அறிந்தவை. 'கஞ்சியை அன்னசாரக் கஞ்சி' என்றும் மருத்துவர் சுட்டுவர்.
தண்ணீர் என்பது சோற்றுத் தண்ணீர் ; நீற்றுத் தண்ணீர் என்பதும் அது புளிப்புமிக்கதாகலின் அது ‘காடி' எனவும் படும். “காடிக் கஞ்சியானாலும் மூடிக் குடி” என்பது பழமொழி. “கஞ்சி தண்ணிக்கு வழியில்லை” என்பது வறுமை ஒலி.
கட்டி முட்டி:
கட்டி
முட்டி
- கட்டபட்ட ஒன்று கட்டி.
ம
கட்டி உடைந்து உண்டாய துண்டு முட்டி.
னி
கருப்புக்கட்டி, வெல்லக்கட்டி, செங்கற்கட்டி, தங்கக்கட்டி இவற்றில் கட்டியின் பொருளை அறிந்து கொள்க. இனி மண்ணாங்கட்டி என்பது ஒரு பொருளும், வசையுமாய்
அமைந்ததாம்.
செங்கற்கட்டி உடைந்ததைச் செங்கல்முட்டி என்பது வழக்கு. உழவடையில் ‘கட்டி முட்டி', தட்டுதல் ஒரு பகுதியாம். கூழ், களி கிண்டும் போது ‘கட்டிபடாமல்' இருக்கக் கவலைப் படுவர். அதில் ‘பெரிய கட்டி’ ‘சிறிய கட்டி’ இருந்தால், “என்ன
து