உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

49

கட்டியும் முட்டியுமாக இருக்கிறது” என்பது வழக்கு. இது ‘கட்டாணி முட்டாணி' எனவும் வழங்கப்படும்.

கட்டுக் காவல்:

கட்டு

காவல்

கோட்டை, அகழ்,சுவர் முதலிய அரண் கட்டாகும்.

காவலர், நாய் ஆகிய கண்காணிப்பு காவல் ஆகும்.

கட்டுமானம் அமைந்தது 'கட்டு' எனப்பட்டது. பழங்காலக் கோட்டைகளைக் கவனித்தால் கட்டு காவல் அமைதி புலப்படும். அகழ், அரண், கோட்டை என்பவை இருப்பினும், அவற்றையும் தகர்த்தோ, கடந்தோ வந்து அழிவு செய்யும் பகைவர் இருப்பர். அவரைத் தடுத்து நிறுத்தவும் அழிக்கவும் காவலும் வேண்டிய தாயிற்று. கோட்டை வாயிலில் காவலர் மேடையும் இருத்தலைக் கண்டு தளிக. அதன் எச்சம் இக்கால ‘அலுவலகங்கள்” கருவூலங்கள் ஆகியவற்றில் இருத்தலை அறிக. கட்டுமட்டு

66

கட்டு

மட்டு

வளமனை

வருவாய்க்குத் தக்கவாறு கட்டுப் படுத்திச் செவ விடல்.

- எவ்வளவு தான் வருவாய் வந்தாலும், திட்டப் படுத்தி ‘இதற்கு இவ்வளவே’ என்று மட்டுப்படுத்தி (எல்லை அல்லது அளவு படுத்தி)ச் செலவிடல்.

"கட்டுமட்டு உடையன்;” “கட்டுமட்டாகச் செலவு செய்வான்" என்பன வழக்குகள். “கட்டுமட்டானவன்" எனப் பொதுவாகக் கூறுவதும் உண்டு. இனி இதனைக் 'கட்டுமெட்டு' என்பதும் உண்டு.

கடன் உடன்:

கடன்

உடன்

– காலம் குறித்து வட்டி மேனி குறித்து ஒப்படை தந்த பெறும் தொகை. எழுத்துறுதியோ

வாக்குறுதியோ இரண்டுமோ இதற்கு உண்டு.

கைம்மாற்று; கேட்டவுடன் அல்லது வாங்கியவர் கையில் பணம் வந்தவுடன் தருவதாகிய தொகை. வட்டியற்றது இது.

“கடன் உடன் வாங்கியாவது செய்வதைச் செய்துதானே தீர வேண்டும் என்று வலியுறுத்தப் பெறுவதும். அவரவரே