உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

எதைச் 6

65

“எதைச் செய்தாலும் சொன்னாலும் கிறுத்தானுக்கு மறுத்தானாக இருப்பதே உனக்கு வழக்கம்” என்பது ஓர் இடிப்புரை.

கிறி என்பதற்குப் பொய், வஞ்சம் முதலிய பொருள் உண்டு. கிறுத்துவம் என்பது குறும்பு என்னும் பொருளிலும் வழங்கு கின்றது. பொய்யைப் பொய்யால் வெற்றி கொள்வான் போல் குறும்பைக் குறும்பால் வெற்றி கொள்வான். கிறுத்தானுக்கு மறுத்தானாம். 'வலியவனுக்கு வலியவன் வையகத்தில் உண்டு' என்பது பழமொழியே யன்றோ!

குச்சும் மச்சும்

குச்சு

மச்சு

குடிசை வீடு.

மாடி வீடு.

குச்சு - ‘குச்சில்' என்றும் கூறப்படும். ஓலைக் கொட்டகையோ, கூரைக்குடிசையோ ‘குச்சு’ ஆகும்.பூப்படைந்த பெண்களைப் புதுக் கொட்டகையில் இருக்க வைப்பர். அதற்குக் குச்சில் என்பது பெயர். “குச்சிலுக்குள் இருக்கிறாள்” எனப் பூப்பானவளைக் குறிப்பது சிற்றூர் வழக்கு.

மச்சு ‘மெச்சு' என்றும், 'மெத்து' என்றும் 'மெத்தை’ என்றும் வழங்கப்படும். “கழுதை கிடப்பது தெருப்புழுதி, கனாக் காண்பது மச்சுமாளி” என்பது பழமொழி.

குட்டி குறுமான்:

குட்டி

பெண் பிள்ளை.

குறுமான் ஆண் பிள்ளை.

“உங்களுக்குக் குட்டி குறுமான் எத்தனை” “குட்டி குறுமான் எல்லாம் நலமா?” என வினவுதல் வழக்கு. குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறித்தல் இன்றும் மலையாள நாட்டில் பெரு வழக்கமாம். அதன் ஆண்பால் ‘குட்டன்' என்பது. அது, நாலாயிரப் பனுவலில் பெருக வழங்குகின்றது. பெருமகன் ‘பெருமான்' ஆவது போலக் குறுமகன் ‘குறுமான்' ஆனான் என்க. குட்டியின் சிறுமைப் பொருளைக் குட்டிச் சாக்கு, குட்டிப்பை, குட்டியப்பா இவற்றில் காண்க.