உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குட்டுநட்டு: குட்டு

நட்டு

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

உள்ளத்துள்ள மறைவுச் செய்தி.

வெளிப்பட்ட விளக்கச் செய்தி.

'உன்குட்டு நட்டு எனக்குத் தெரியாதா? என்னிடமே அவிழுக்கிறாயே" என்பது வழக்கு.

"உன் குட்டை உடைக்கட்டுமா?” என்னும் வினாவில் குட்டு என்பது மறைவுச் செய்தியாதல் புலப்படும்.

நட்டு என்பது நட்டப்பட்டது, வெளிப்பட்டது என்னும் பொருளதாம். நுண்ணறிவு படைத்தவனைக்குட்டு நட்டுத் தெரிந்தவன் என்பது நாட்டுப்புற வழக்கு. நட்டு என்பது நெட்டு என்றும் வழங்கப்படும்.

குட்டை கட்டை:

குட்டை

கட்டை

நெட்டைக்கு மாறானது குட்டை

குட்டையானதும் பருத்ததும் கட்டை.

வரும்

குட்டைப்பிள்ளை கட்டைப் பிள்ளை' என்பதில் முன்னது குள்ளமானது என்றும், பின்னது குள்ளமானதும் கனமானதும் என்றும் பொருளாம். குளம் குட்டை என்பதில் குட்டையையும், கைக்குட்டையையும் கருதுக. கட்டைவிரல், பெருவிரல் என்பதை எண்ணுக. நெடுமரத்தைக் குறுகக் குறுக வெட்டியது 'கட்டை' எனப்படுவதையும் - கொள்க’ குடலும் குந்தாணியும்:

குடல் குந்தாணி

66

- சிறு குடல்-பெருங்குடல் முதலியவை.

குடலின் மேல் மூடி (உதரவிதானம்)

“குத்திய குத்தில் குடலும் குந்தாணியும் தள்ளிவிட்டன என்பது வழக்கு.

குடல் என்பதற்குக் குழல் போல்வது என்பது பொருள். உட்டுளையுடையவை குடல், குழல், புடல், புழல் முதலியவை என்க. குந்தாணி என்பது உரல்மேல் வளையமாக இருக்கும் வளை தகடு என்பதை அறிவது. மேல்மூடி என்னும் பொருளுக்கு உதவும்.