உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி

69

ஊர் விழாக்களிலும் 'கும்மி கோலாட்டம்’ நிகழ்த்தப்படுவ துண்டு.

குழிவு குவிவு

குழிவு

குவிவு

பக்கங்கள் உயர்ந்து நடுவே குழி வானது குழிவு ஆகும்.

நடுவுயர்ந்து பக்கங்கள் குழிவானது குவிவு ஆகும்.

முன்னதற்குக் குழியையும் பின்னதற்குக் குவியலையும் கண்டு அறிக. கிட்டப்பார்வை எட்டப்பார்வைகளுக்குக் குழிவு ஆடி, குவிவு ஆடிகளைப் பயன்படுத்துதல் நடைமுறைச் செய்தியாம். குழியைக் ‘குண்டு குழி' என்பதிலும், குவிவை மலர் குவிதலிலும் கண்டுகொள்ளலாம். தாமரை குவிதல் போல் கைகுவிதலையும் (கூப்புதலையும்) ஒப்பிட்டுக் ‘கைம்மலர்’ என்பதன் அருமையை உணரலாம்!

குற்றுயிரும் குலையுயிரும்

குற்றுயிர் - மூச்சு உள்ளே போகிறதோ வெளியே வருகிறதோ என்பது தெரியாமல் அரைகுறை உயிராகக் கிடக்கும் நிலை.

குலையுயிர்- நெஞ்சாங்குலையில் மட்டும் உயிர்த்துடிப்பு இருக்கும்

குறுமை

குலை

நிலை.

சிறுமை; வெளிப்பட அறியமுடியாமல் மெல்லெனச் செல்லும் மூச்சு நிலையை இவண் குறித்தது.

என்பது நெஞ்சாங்குலையாம் நுரையீரலைக் குறித்தது. அங்கே ஒடுங்கிய பின்னரே உயிர் பிரிந்தது என்று காள்ளப்படுகின்றதாம். குலையை ‘ஈரற்குலை' என்பதும் வழக்கு. "குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறார்" என்பது நடைமுறைச் செய்தி.

குறுக்கும் மறுக்கும்

குறுக்கு

மறுக்கு

குறுக்காகச் செல்வது குறுக்கு

குறுக்காகச் செல்வதற்கு எதிரிடையாக மறுத்துச் செல்வது மறுக்கு.