70
இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2
இது ‘குறுக்கா மறுக்கா’ எனவும் வழங்கும். குறுக்காக மறுக்காக என்பவற்றின் தொகுத்தல் ஆகும். நெடிய உடலின் குறுக்காக அமைந்தது 'குறுக்கு' எனப்படுவதையும், 'குறுக்கு வழி' என்பதையும் நினைக. மறுத்தல், மறுக்கம், மறுமொழி இவற்றால் மறுக்கு எதிரிடையாதல் கொள்க.
ப
குறுக்கும் மறுக்கும் ஓடுதல்’ ‘குறுக்கு மறுக்குமாக உழுதல்’ என்பவை வழக்கங்கள்.
குறுக்குவழி சுருக்குவழி
குறுக்கு வழி- நெடிதாகச் செல்லும் சாலை வழி, வண்டிப்பாதை என்பவை தவிர்த்துக் குறுகலாக அமைந்த நடை
வழி. அது நெடுவழியினும் அளவில் குறுகுதலுடன், தொலைவும் குறுகியதாக இருக்கும்.
சுருக்குவழி குறுக்கு வழியிலும் தடம் உண்டு; தடத்தைப் பற்றியும் கருதாமல் மிகச்சுருக்கமாகச் செல்லுதற்கு ஏற்படுத்திக் கொண்ட வழி. அது போகுமிடத்தை
நேர் வைத்துத் தடமும் வழியும் கருதாமல் செல்வதாம்.
முன்னதில் குறுகுதல் மூலம்; பின்னதில் சுருங்குதல் மூலம்.
கூச்சலும் கும்மாளமும்
கூச்சல்
துன்புறுவார் ஓலம்
கும்மாளம் துன்புறுத்துவார் கொண்டாட்டம்.
இதனைக் ‘கூச்சல் கும்மரிச்சல்'என்றும் கூறுவதுண்டு. அதற்கும் இதே பொருளாம்.
இக்கூச்சல் அவலத்தில் இருந்து உண்டாவது. கும்மாளம் அல்லது கும்மரிச்சல் என்பது எக்காளத்தில் இருந்து எழும்புவது. கும்முதல் - அடித்தல் பொருள் தரும். அடித்து ஆரவாரித்தலால் கும்மாளம் ஆயிற்றாம். இஃது எருதுக்கு இரணவலி காக்கைக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி தான்!
கூச்சல் குழப்பமும்
―
கூச்சல்
குழப்பம்
―
துயருக்கு ஆட்பட்டோர் போடும் ஓலம்.
துயருற்றோர் ஓலம் கேட்டு வந்தவர் போடும் இரைச்சல்.