இணைச்சொல் அகராதி
77
‘சங்கடமான வேலை' ‘மனச்சள்ளை' என்னும் வழக்குகள்
இவற்றின் பொருளை வெளியாக்கும்.
சட்டதிட்டம்
சட்டம் திட்டம்
அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை
சமுதாயத்தால் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்கு
முறை.
“சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்" என்று வலியுறுத்துவதும் எதிர்பார்ப்பதும் நாகரிக நாடுகளுக் கெல்லாம் பொதுவிதி.
சட்டங்கள் அரசால் அல்லது அரசின் அமைப்பால் உருவாக்கப்பெற்றாலும் சமுதாய அமைதியையும் நன்மையையும் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றன. ஆகவே, இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று விலக்கமில்லாத் தொடர்பினவாம். ஆனால் தனித்தன்மை உடையனவாம்.
சண்டு சாவி
ச ண்டு- நீர் வளமற்றோ வளமற்றோ நோயுற்றோ விளைவுக்கு வராமல் உலர்ந்து போன தட்டை தாள் முதலியவை.
சாவி
- மணி பிடிக்காமல் காய்ந்துபோன கதிரும் பூட்டையும். சண்டு பயிரில் நிகழ்வதும், சாவி கதிரில் நிகழ்வதும் ஆகும். விளைவுக்கு வாராமல் அறுக்கப் பெறும் நெல்தாள் ‘சண்டு வைக்கோல்' எனப்படுவதும், சாவி ‘பதர்' எனப்படுவதும் கருதுக. சண்டுவற்றல் சருகுவற்றல்
சண்டுவற்றல் நோய்ப்பட்டு வெம்பி வெதும்பிப் போன வற்றல் சண்டு வற்றலாம்.
சருகுவற்றல்
காம்பும் விதையும் கழன்ற வற்றல் சருகு வற்றலாம்.
மிளகு வற்றல் அல்லது மிளகாய் வற்றலில் தரம்பிரிப்பார் சண்டு வற்றலையும் சருகு வற்றலையும் இவ்வாறு ஒதுக்குவர்.