உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சண்டைசச்சரவு

சண்டை

சச்சரவு

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு;

- மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு

வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு தழுவிய அளவில் நடப்பது போர் என்றும் வேறுபாடு கொள்க. சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப்படா, கலின் கைகலப்பு எனல் தகும். சிலர் கைகலப்பு இன்றி வாய் கலப்பு அளவில் அமைவதும் உண்டு. இரண்டையும் இணைத்துச் “சண்டை சச்சரவு போடாதீர்கள்” என்று கூறுவர் அதனைத் தடுப்பவர்.

சத்திரம் சாவடி

சத்திரம்

சாவடி

காசிலாச் சோற்று விடுதி

காசிலாத் தங்கல் விடுதி

சத்திரம் சாவடி கட்டுதலும் அவற்றை அறப் பொருளாய் நடத்துதலும் நெடுநாள் வழக்கம். சத்திரம் சாவடிகளுக்கு நிலக்கொடை புரிந்த செய்திகள் மிகப்பல. இவற்றோடு கிணறு, சோலை, தண்ணீர்ப்பந்தல் முதலியன அமைத்த செய்திகளும் பழமையானவை. ஊரூர்க்குச் சத்திரம் உண்டு; சாவடியும் உண்டு; சத்திரப் பெயரால் ஊர்களும், சாவடிப் பெயரால் ஊர்களும் தெருக்களும் மிகப்பலவாம்.

சந்தி சதுக்கம்

சந்தி

சதுக்கம்

இரண்டு தெருக்களோ மூன்று தெருக்களோ சந்திக்கும் இடம் சந்தியாம்.

நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம் சதுக்கமாம். மூன்று தெருக்கள் சந்திப்பதை முச்சந்தி என்றும், நான்கு தெருக்கள் சந்திப்பதை நாற்சந்தி என்றும் கூறுவதுமுண்டு.

சந்தியும் சதுக்கமும் மிகப் பழமையானவை சங்கநூல்களில் இடம் பெற்றிருப்பது கொண்டு அறியலாம்.