உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு-ம்:

இருசொல் அழகு

வேளானைச் சேரும் விருதாவளியும்

99

வேசியர் சொல் தள்ளாமல் செய்யும் தறுதலையும் பாட்டுக்குப் பயனறியாத பாவலரும்

மாட்டின் அடிவயிற்று மயிர்.

- இம் மூன்றும்

வி-ம் : வேளாண்மைத் தொழிலனைச் சேர்ந்த வெட்டித் தனமானவனும், பொருட் பெண்டிரின் சொற் கேட்டுத் திரிபவனும், பாட்டின் சுவையறியாத படிப்பாளியும் ஆகிய இம் மூவரும் இருந்தும் இல்லாதவரேயாவர்.

மு-ம்:

நாளை நாளை என்பவன் கொடையும்

நலமறியாக் காளையுடன் கலக்கலும்

பூவிற் குவிந்தவழி விழுந்த ஈயும்

கடலில் கவிழ்ந்த கலம்.

(8)

- இம் மூன்றும்

வி-ம்: உடனே கொடாமல் காலம் கடத்துபவன் ஈகையும், நல்லதுபொல்லது அறிந்து பழகாதவனொடு நட்பாடலும்,குவியும் பூவுக்குள் புகுந்து விட்ட ஈயும் ஆகிய இம் மூன்றும் இருப்பவை என்பதற்கும் அடையாளம் தெரியாமல் போவவை யாம்.

மு-ம்:

காலையில் பலநூல் ஆராயாத் தலைமகனும் ஆலெரிபோன்ற அயலானும்

(9)

சாலை மனைக்கட்டில் இருக்கிற துணையாளும்

அட்டமத்தில் சனி.

- இம் மூன்றும்

வி-ம் : விடி பொழுதில் எழுந்து கல்வியில் கருத்து வைக்காத கல்வியாளனும், ஆலஞ்சருகுபோல் எரிந்து, எப்பயனும் செய்யாமல் போகின்ற அயலான் நட்பும், தெருப்பார்த்த வீட்டின் மனைக் கட்டில் இருந்து தெருவையே பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணும் எட்டாமிடத்துச் சனிபோல் கேடானவர்.

முற்றும்

(10)