உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மு-ம்:

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

இரும்பை அரம்போல் தேய்க்கின்ற உறவும் இல்லறத்தில் வல்லாண்மை பேசு மனையாளும் நல்ல மரமேற் புல்லுருவி பாய்கின்ற நட்பும் - இம் மூன்றும்

கொல்ல வரவிட்ட கூற்று.

வி-ம் : வலிய இரும்பை எளிமையாகத் தூளாக்கும் கருவி அரம். குடும்பத்தில் சண்டையுண்டானால் ஆக்கச் செயல் இல்லாமல் அழிந்து போகும். நல்ல மரத்தில் புல்லுருவி உண்டானால் நீரையும் உரத்தையும் உறிஞ்சி மரத்தைக் கெடுக்கும். அழிவுக்கு மூலமானவை இவை.

மு-ம்:

எழுதிப் பாராதவன் கணக்கும்

உழுது விதைக்காதவன் செல்வமும் அழுது புரண்ட மனையாளும்

கழுதை புரண்ட களம்.

(5)

- இம் மூன்றும்

வி-ம்: கழுதை புரண்டகளம் என்பது தெருப்புழுதி,குட்டிச் சுவர், வரவு செலவு எழுதிப்பார்த்தல் பொருளியல் சீர்.

உழுது விதைத்து உரிய பணிபுரிதல் உழவன் கடன். மலர்ச்சியோடு வாழ்ந்து மனையறம் பேணல் மனை விக்குச் சிறப்பு. இவை இல்லையேல் பாழானவை யாம். மு-ம்:

தட்டானைச் சேரும் தறுதலையும்

(6)

தன்மனையாள் இட்டம்பெற உரைக்கும் ஏழ்மையும் வெட்கத்தில் இருந்துண்ணும் விருந்தும்

ஆட்டின் கழுத்தின் அதர்.

- இம் மூன்றும்

வி-ம்:ஆட்டின் கழுத்தில் தொங்கும் தசை அதர் எனப்படும். எப்பயனும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருப்பதே அது. அது போல், அணிகலமே குறி என்று திரிபவரும், மனையாள் மதியாத அளவு வறுமைப்பாட்டாளனாக இருக்கும் சோம்பனும்,வெட்கம் கெட்டுப் போய் வேண்டா விருந்தாளனாக இருப்பவனும் பயனிலா வாழ்வினர்.

(7)