உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

97

வி-ம் : ஆடுகள் ஓடிய காட்டின் வளமை ஒழியும் அரசனோடு கூடிக்கூத்தடிக்கும் ஊரும் கெடும். கணவன் வீட்டை விட்டுத் தாய் வீடே தஞ்சமாகி இருப்பவள் வாழ்வு கெடும்.

பேயோடு ஆடுதல் இல்லாது ஒழிதல். வெள்ளாடு போன

காடு வெறுங்காடு என்பது பழமொழி.

66

அரசறிய வீற்றிருந்த வாழ்வு விழும்" என்பது முன்னவர் மொழி. பிறந்த வீட்டையே நோக்குபவள் பெரும்பேதை என்பது வழங்கு மொழி.

மு-ம்:

ஆறு நேரான குளமும்

அரசரோடு ஏறுமாறான குடியும்

புருடனைச் சீறும் மாறான பெண்டிரும்

நீறு நீறாய் விடும்.

(2)

- இம் மூன்றும்

வி-ம் : ஆற்றுக்கு நேராக இருக்கும் குளம் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளமாகும் போது, கரை அழிந்து ஊருக்கும் கேடாம். அரசர் பகை அழிவாக் கும். கணவனை மோதுதலால் குடும்பத்தைப் பாழாக் கும் மனைவி - நீறு என்பது சாம்பல். சாம்பல் புழுதி போலக் காற்றில் பறந்து ஒழிந்து போகும்.

மு-ம்:

ஆணி ஆனை வாலொத்த கரும்பும் ஆறு நான்கில் பெற்ற புதல்வனும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும்

பெரியோர்கள் வைத்த தனம்.

(3)

-

- இம் மூன்றும்

M-ம் : ஆணி ஆனை = வலிய யானை. கரும்பு வளமாக வளர்ந்து தடித்திருத்தல். 24 ஆம் வயதில் பெற்ற பிள்ளை பெற்றோர்க்குப் பொன் விழாக் காணும்போதே அவனும் குடும்பத்தவனாகி விடுவான். காலம் அறிந்து பயிரிடல் பயன் பெருக் கும் என்பது புரட்டாசி 15 என்பது. நடவு = நெல் நடுதல் பெரியோர்கள் வைத்த தனம் என்பது முன்னோர்கள் தேடி வைத்த தேட்டுப் போன்றது என்பதாம்.

(4)