உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

முச்சொல் அலங்காரம்

இருசொல் அலங்காரம் அச்சிட்டபின் தொடர்ச்சி யாக அச்சிடப்பட்டிருந்தது இது.

காப்பு

மு-ம்:

வி-ம் : மு-ம்:

சச்சி தானந்தன் தாள்இணை பணிந்து முச்சொல் அலங்காரம் யான் மொழிவேனே. சச்சி தானந்தன் = சிவன். தாள் = திருவடி. அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும் வெட்கஞ் சிக்கில் லாதான் வீரியமும்

துக்கப்பட் டுண்ணாதான் சோறும்

-

கைக்கித் தின்ன நாயோ டொக்கும்.

- இம் மூன்றும்

வி-ம் : அக்குத் தொக்கு = உற்றார் உறவு; வளம் வாய்ப்பு. வெள் கஞ்சிக்கு இல்லாதவன் = வெறுங் கஞ்சிக்கும் வழியற்றவன்; உழைத்துத் துன்பப் படாமல் உண்பவன். கைக்கி = கக்கி. தான் தின்ற உணவைக் கக்கி மீண்டும் அதனைத் தின்னல் நாயின் இழிதன்மை. துணையில்லான் துணிவு வெட்கக் கேடானது கஞ்சிக்கு வழியற்றவன் சொல்லுக்குக் காது தரார் எவரும், உழைத்து உண்ணாதவன் ஊர்க் கேடன் என்பவை பலரும் பயில வழங்குபவை. (1)

மு-ம்:

ஆடோடு ஆடிய காடும்

அரசனோடு ஆடிய ஊ ரும்

அடிக்கடி தாய்வீடு ஓடிய பெண்ணும்

பேயோடு ஆடிய கூத்து.

- இம் மூன்றும்