உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

95

நல்ல காலுடையவன் நொண்டிநடக்க மாட்டான். அவன் காலில் முள் தைத்து விட்டால் நொண்டி நடப்பான். அதனைக் குறிப்பது பின்னுள்ள முட்டாள். முள் + தாள் = முட்டாள்.(97) பு-ம் : வீணாய்ச் சுற்றற் கென்ன பெயர்?

விரும்பும் தையற் கென்ன செயல்?

- வெட்டி வேலை வெட்டி வேலை

வி-ம்: வேலையில்லாமல் சுற்றித் திரிவதை வெட்டி வேலை என்று பழிப்பது வழக்கம். வெட்டித் தனமாகத் திரிவதே வேலை; வேறு வேலை இல்லை என்பதாம்.

சட்டை வகைகள் துணியில் ஆக்குபவர் அளவு எடுத்துத் துணியை அதற்குத் தக வெட்டி வேலை செய்தலால் அது வெட்டி வேலை செய்தல் ஆயிற்று. வேலையே வெட்டுதலால், வெட்டி வேலை.

பு-ம் :

வென்றெடுப்ப தெதனாலே?

வெட்கிக் குனிவ தெதனாலே?

(98)

அக்கறையால் அக்கறையால்

வி-ம் : எம் முயற்சி எனினும் செம் முயற்சியாய் அமைய அக்கறைப்பட்டால் எடுத்த செயல் வெற்றியாக முடிதல் உறுதி. வெற்றியினும் முதலாக வேண்டுவது அக்கறையே.

பலர் முன்னே ஆயினும் தனித்தும் கூட, உடுத்திய உடையில் கறையிருந்து பளிச்சிட்டுக் காட்டினால் வெட்கம் தானே வந்து தலை குனியும். அ + கறை = அந்தக் கறை.

பு-ம்:

வேலை இடையே விடுவதேன்?

விழா எனக் கொண்டாடுவதேன்?

(99)

மதியம் பார்த்து மதியம் பார்த்து

வி-ம் : உழவு சார்ந்த வேலையாள்கள் உணவு இடை வேளைக்கு நடுப்பகல் பொழுதை (மதியத்தை) நோக்குவர்.

முழுமதிப்

ஊர் விழாக்களுள் பலவும் வளர்பிறை, முழுமதி என்பவற்றைப் பார்த்தே நிகழ்த்துவர். அம்மதியம் என்பது பொழுதையே யாகும்.

(100)