உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வி-ம் : தஞ்சாவூர் பொம்மை என்பவை தலை யாட்டிப் பொம்மை என்றே பெயர் வழங்கி வருகின் றது.

99

தாமாக உழைத்துப் பிழைக்கமாட்டாமல் பிறர்க்கு ச்சகம் பேசி வாழ்பவர் தம் தலையாட்டி, “ஆமாம் ஆமாம் என்றே வாழ்பவராக இருப்பர்.

பு-ம்:

தமிழர் பொங்கல் பேரென்ன?

தாளக் கட்டின் ஒலிப்பென்ன?

(94)

தை தை

வி-ம் : தமிழர் திருநாள் - பொங்கல் நாள். அது தைத்திங்கள் முதல் நாள் ஆகும். தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி.

L

நடம் ஆடுவதற்குக் கால் வரிசை வைக்கத் தட்டி ஒலிக்கப் படும் தாளம் 'தைத் தக்க தை’ என்பதாம். தை என்பது தாளத்தின் முதல் ஒலி.

பு-ம்:

தாழ்ந்த கிளை நிமிர்வதேன்?

தழைத்த சேறு சாறாவதேன்?

(95)

- கொம்பை வெட்டிக் கால் கொடுக்க கொம்பை வெட்டிக் கால் கொடுக்க

வி-ம் : தாழ்ந்த கிளை நிமிர்வதற்கு மற்றொரு மரக்கிளையை (கொம்பை) வெட்டிஊன்று காலாகத் தந்தால் போதும். நிமிர்ந்து விடும். கொம்பு = கிளை; கால் = ஊன்று, முட்டு.

சேறு என்பதில் இரட்டைக் கொம்பு முன்னாக உள்ளது. அதனை நீக்கி, ஆ என்பதற்கு அடையாள மான கால் (r) தந்து விட்டால் சே என்பது சா ஆகிவிடும். சேறு என்பது சாறாகும். கொம்பு, கால் என்பவை எழுத்துக் குறியீடுகள். அந்தகக் கவிவீர ராகவர் அம்மைச்சி வரலாற்றின் பின்னணி யுடையது இது.(96) பு-ம்: நல்லறி வில்லாமை ஏன்?

நடையில் நொண்டி ஆவதேன்?

– முட்டாளால் முட்டாளால்

வி-ம் : நல்லறிவு இருக்குமானால் அவனை அறிந்தவர் முட்டாள் எனக் கூறார். தன்னறிவோ சொல் வார் அறிவோ இல்லானே முட்டாள் என்று பழிக்கப்படுவான்.