உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு-ம் :

இருசொல் அழகு

செருக்கின் அடையாளம் ஆவதெது?

சேர்த்துக் கூட்டினால் அரையாவதெது?

93

கால்மேல் கால் கால்மேல் கால்

வி-ம்:செருக்குடையவன் அவை மதிப்போ அடுத்திருப்பவன் பற்றிக் கவலையோ படாமல் கால்மேல் கால் போட்டு இருப்பான். கால், உறுப்பின் பெயர்.

கூட்டல் கணக்கில் கால் என்னும் அளவுப் பெயருடன் கால் சேர்க்கப்படுமானால் அரை என்னும் அளவுப் பெயர் ஆகும். கால் அளவுப் பெயர்.

பு-ம்:

சொற்றொடரின் முடிநிலை என்ன?

சொற்கேளான் வாழ்நிலை என்ன?

(91)

பயனிலை பயனிலை

வி-ம் : சொற்றொடரின் முடிநிலை என்பது வினை முற்று. அது பயனிலை ஆகும். பயன் நிற்கும் இடம் பயன் நிலை.

ஆசிரியர் பெற்றோர் நல்லோர் சொல் கேட்டு நடவாதவன் வாழ்வு பயன் இல்லாத வாழ்வாகும். பயன் + இலை = லை = பயனிலை. தம்பி எழுவாய்; இருந்து பயனிலை;

செல்வது செயப்படு பொருள் என்பதை நினைக.

(92)

பு-ம் :

சொன்னபடி உண்டீரா?

சுவையாக இருந்ததுவா?

உணவருந்தினேன் உணவருந்தினேன்

வி-ம் : சொல்லியவாறு நான் விருந்துணவு உண்டேன்; அதாவது உணவு அருந்தினேன். முதல் வினாவின் விடை இது.

உணவை உண்டதன் பயன் என்ன ஆயது? வயிற்றைப் புரட்டியது; வலித்தது. கலக்கு கலக்கெனக் கலக்கியது. அதனால் “உண(உண்ண) வருந்தி னேன்” என்பது அதன் விடையாயிற்று.(93) தஞ்சைப் பொம்மை நிலை என்ன?

பு-ம் :

தழுவிப் பிழைப்பார் இயல்பென்ன?

தலையாட்டல் தலையாட்டல்