உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பின்வரும் காட்சி இன்பம் மாலைப் பொழுதில் கதிரோன் மறையும் நிலையில் காணப்படும் வானக் காட்சி இன்பமாகும். கண்ட = பார்த்த.

(87)

பு-ம் :

கழுதை முட்டி தட்டுவதேன்?

கவிதை பிழையில் முட்டுவதேன்?

- தளை தட்டி தளை தட்டி

வி-ம் : கழுதையின் காலைக் கட்டிவிட்டால் எங்கும் ஓடாது. இன்னும் இரண்டு கழுதைகளைக் கட்டியும் வைத்தல் உண்டு. தளை = கட்டு; தட்டி = தடையாகி.

பாடலுக்கும் தளையுண்டு. அந்த அந்தப் பாடலுக்கு உரிய தளை மாறினால் பாடல் தளை தட்டிப் பிழைபட்டதாகிவிடும். தளை என்பது சீர்களை இணைக்கும் தட்டு. தட்டி=பிழையாகி.(88) பு-ம்: கீரை கறியாக்கச் செய்வதென்ன?

கிடைக்கும் விருதுக்குச் செய்வதென்ன?

ஆய்வு செய்தல் ஆய்வு செய்தல்

வி-ம் : கீரையைக் கறியாக ஆக்குவதற்கு அதனை ஆய்தல் செய்வர். ஆய்தல் என்பது முற்றியது அழுகியது பூச்சி பிடித்தது நீக்கி, நல்லதைக் கொள்வதாகும். பெறவேண்டிய பட்டத் திற்காகப் படிப்பவர் அதற்கென ஒரு தலைப்பில் ஆராய்ச்சி மேற் கொண்டு அதனை எழுத்துருவாக்கிப் படைப்பார். அப்பணி, ஆய்வுப் பணி எனப்படும். (89)

பு-ம் :

கொல்லர் கூடப் பணியென்ன?

கொண்ட சமையல் பணியென்ன?

- காய்ச்சி வடித்தல் காய்ச்சி வடித்தல் வி-ம் : கொல்லர் உலைக் கூடத்தில் இரும்பைக் காய்ச்சி வேண்டும் கருவிகளை உருவாக்குவார்கள். வடித்தல், வடிவமாக்குதல்.

.

சமையல் கூடத்தில் சோறாக்கி - கறியாக்கி, வடிப்பதை வடித்துப் பணி செய்வர். வடித்தல் = வடியச் செய்தல்.

(90)