உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

==

91

வி-ம்: வேங்கை = புலி. புலியைக் கண்டவுடன் அதன் அழகு பாய்ச்சல் தோன்றுவது இல்லை. தோன்றுவது அச்சமே ஆகும். "பந்தம் எரியுதோடி, கண்கள் பார்க்கப் பயமாகுதடி என்றார் கவிமணி.

வேம் + கை = வேங்கை. வேகும்கை. தீயில் வேகும் கையை உடையவர் மட்டுமா, காண்பவரும் உருகிக் கண்ணீர் வடிக்கத்தானே செய்வர்? (84)

பு-ம்:

கருப்புக் கட்டி கிடைப்பதேன்?

காலில் கட்டி காண்பதேன்?

கரும்பாலையால் கரும்பாலையால்

வி-ம் : கரும்பு ஆட்டிக் கட்டி எடுக்கப்படும் ஆலை கரும்பு ஆலை ஆகும். ஆதலால் கருப்புக் கட்டி எடுக்கக் கரும்பு ஆலை வேண்டும்.

காலில் கட்டி (கொப்புளம்) உண்டாவது கடுமை யான வெப்பமுள்ள நிலத்தில் நடந்தால் உண்டாகி விடும். கரும் + பாலை = கரும்பாலை. பாலை = வெப்பமிக்க நிலம்.

பு-ம்:

கரை பார்த்து மகிழ்வதேன்? களம் பார்த்து வருந்துவதேன்?

(85)

கால்வரவால் கால்வரவால்

வி-ம் : கால்வாய்க் கரையில் நின்று நீர் பெருகிவரக் கண்டால் மகிழ்வு உண்டாகும். பயிர் விளைந்து விடும் என்பது மகிழ்வின் காரணமாம்.

கதிராகி அடிக்கும் களத்தில் விளைவு கால் பங்கு வரவாக இருந்தால் வருத்தம் உண்டாதல் இயற்கை. வரவேண்டிய அளவில் கால் பங்கு வருதல், கால் வரவு.

பு-ம்:

கழுத்தில் புண்ணாகி வழிவதேன்?

காட்சி இன்பம் வாய்ப்பதேன்?

(86)

கண்டமாலையால் கண்டமாலையால்

வி-ம் : கழுத்தில் வளையமாய்ச் சுற்றிப் புண்ணாகி நீர் ஒழுகும் நோய் 'கண்ட மாலை' எனப்படும். கண்டம் = கழுத்து. மாலை = மாலை போன்ற வளைவு உடையது.