உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பு-ம்:

ஆனையை வென்ற தெதனாலே?

அறுவடை, காலத்தே முடிந்த தெதனாலே?

வேலை ஏவி வேலை ஏவி

வி-ம் : யானைப் போர்க்கு உரிய கருவி வேல் ஆகும். அஞ்சாது வேலை ஏவி வெற்றி பெற்ற வீரனே வேலன் என்க. வேல் = கருவி.

அறுவடைக்கு ஆள்விடுத்துப் பயனில்லை. நின்று வேலை செய்வாரை ஏவி வேலையை முடித்தல் வேண்டும். வேலை = தொழில்; தொழில் புரிபவர்.

பு-ம் :

ஓடாய் உடைந்து கிடப்பதேன்?

ஓலமிட்டுக் கதறுவதேன்?

(81)

கலம் கவிழ்ந்து கலம் கவிழ்ந்து

வி-ம்: அடுக்கிவைக்கப்பட்ட மண்பாண்டம் கவிழ்ந்தால் உடைந்து ஓடாகக் கிடக்கும். கலம் = ஏனம் (பாத்திரம்).

=

கடலில் சென்ற கப்பல் கவிழ்ந்தால் தப்பிப் பிழைக்க ஒவ்வொருவரும் ஓலமிட்டுக் கதறுவர். ஓலம் = கூக்குரல். கலம்

=

கப்பல்.

பு-ம்:

கடன் கேட்பவர் நிலையென்ன?

களஞ்சியம் பதத்தால் நிலையென்ன?

(82)

மடிபிடித்தல் மடிபிடித்தல்

வி-ம் : முன்னாளில் பணப்பையை மடியில் வைக்கும் வழக்கத்தால் கடன் தந்தவர் மடியைப் பிடித்துப் பார்ப்பர். மடி இடுப்பு வேட்டி.

களஞ்சியத்தில் உள்ள தவசத்தில் ஈரம் பட்டால் ஒரு நெடி உண்டாகும். அத்தவசம் கெட்டுப்போன அடையாளம் அது. மடி=மடித்துப் போதல்.

பு-ம்:

உள்ளத் தச்சம் உறுவதேன்?

உருகிக் கண்ணீர் வடிப்பதேன்?

(83)

வேங்கை கண்டு வேங்கை கண்டு