உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

89

எண்ணிக்கையால் நூறாக்கல் கருதியது மட்டு மன்று இது. இப்படிப் புனைய இதனைப் படிப் பார்க்கும் இயலும் என்பதைத் தூண்டவே இது செய்யப்பட்டதாம்.

பு-ம் :

அரிசி மாவு புளித்ததேன்?

அந்தப் பிள்ளை அரண்டதேன்?

ஆட்டிவைக்க ஆட்டிவைக்க

வி-ம் : அரிசியை மாவாக ஆட்டி வைத்தால் வெப்பத்தால் புளிப்பு ஏற்படும். அதற்கு அரிசியை ஆட்டி(அரைத்து) வைக்க வேண்டும்.

அடித்துமிரட்டித்துடிக்கச் செய்வதில்சிலர்க்கு இன்பமுண்டு. அவர்கள் அலைக்களிப்பாளர். அவரைக்கண்டாலே குழந்தைகள் அஞ்சி நடுங்கும். ஆட்டி வைத்தல் = அலைக்கழித்தல். பு-ம்:

அழகு வண்டி ஓடுவதேன்?

(78)

அரிய நீறு ஆவதேன்?

அச்சாணியால் அச்சாணியால்

வி-ம் : எந்த வண்டி எனினும் அச்சாணி வேண்டும். அச்சு + ஆணி = அச்சாணி. தேருக்கும் அச்சாணி உண்டு. நடை வண்டிக்கும் உண்டு.

அரிய நீறு = அருமையான திருநீறு. அதனைச் சாணி யாலேதான் செய்வர். ஆதலால் மூலப் பொருள் அதுவாகும். அ + சாணி = அச்சாணி.

=

(79)

பு-ம்:

ஆய்வுக்காகச் சென்ற தெங்கே? ஆசைக்காக முத்திய தெங்கே?

செவ்வாய்க்கு செவ்வாய்க்கு

வி-ம் : அறிவியல் ஆய்வாளர்கள் திங்களை ஆய்ந்தனர். இதுகால் செவ்வாய் என்னும் கோளினை ஆய விண் ஓடம் செலுத்துகின்றனர். அதனைக் குறிப்பது முன்னது. செவ்வாய் = கோளின் பெயர்.

ஆர்வத்தால் மழலையர்க்குப் பரிசாகத் தாய்மார் குழந்தை களின் சிவந்த வாயில் முத்தம் தருதலைக் குறிப்பது பின்னது. செவ் வாய் = சிவந்த வாய்.

(80)