உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இ-ம்:

> இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வீதியில் மனிதர் புரளுவதேன்?

வீடுகள் எங்கும் நிறைவதேன்?

குடிமிகுந்து குடிமிகுந்து

வி-ம் : மது வகைகளை மட்டோடு குடித்துக் கொள்பவர் தங்கள் வீடுகளுக்குப் போய்ச் சேரும் அளவு தெளிவினராக இருப்பர். அம் மட்டு இன்றிக் குடிப்பவர் வீதிகளிலே எப்படிக் கிடக்கிறோம் என்பதும் தெரியாமல் கிடப்பர்.

குடி=மதுக் குடிப்பு. ஒவ்வோர் ஊரிலும் மக்கள் பெருக்கம் உண்டானால் அதற்குத்தக வீடுகளும் பெருகவே நேரும். குடி= குடியிருக்கும் மக்கள்.

(75)

இ-ம் :

வெந்த கறி மணப்பதேன்?

வேந்தர்படை முரிவதேன்?

பெருங்காயத்தால் பெருங்காயத்தால்

வி-ம் : வெந்த கறியில் பெருங்காயப் பொடி தூவி னால் உள்ள மணத்தை மேலும் உயர்த்திக் காட்டும். அதற்குப் பயன்படுவது பெருங்காயம் என்னும் கூட்டுச் சரக்கு.

L

வேந்தர் படை போர்க்களம் வந்து புறமுதுகிடக் காரணம்

பகைவர் படையின் தாக்குதலால் தாக்குதலால் புண்களாலேயே ஆகும். காயம்=புண்.

இடம்:

வெற்றிலை சுமப்பதேன்?

உண்ட உண்டாகிய

வேந்தர் சரணடைவதேன்?

பரிய

(76)

கோட்டையிட்டு கோட்டையிட்டு

வி-ம் : வெற்றிலையைப் பறித்துச் சீராக அடுக்கி, அவ் வடுக்குகளைக் கூடை, வாழை மட்டை ஆகியவற்றில் தக்கவாறு அடுக்கிக் கட்டாக்கிச் சுமந்து செல்வது குறித்தது முன்னது.

அரசர் தம் கோட்டையைப் போரில் வெற்றி கொண்ட அரசரிடம் ஒப்படைத்து அவர் அடிக்கீழ் நிற்பது உண்டு. அதனைக் குறித்தது பின்னது. கோட்டை = மதில்.

(77)

குறிப்பு : 78 முதல் 100 முடிய உள்ள 23 இரு சொல் அழகுகளும் புதிதாக எம்மால் இயற்றி விளக்கம்தரப்பட்டவை. (பு-ம்)