உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

87

வானவரும் முனிவரும் வணங்குவது அரி என்பதும் சிவம் என்பதும் தான். அரி + சிவம் = தான்.

(71)

இடம் :

வாலி இறப்பதேன்?

வௌவால் விழுவதேன்?

அம்புருவி அம்புருவி

வி-ம்: வாலி இராமன் ஏவிய அம்பு உடலைத் துளைத்துச் சென்றதால் உயிர் நீங்கினான். அம்பு + உருவி.

வௌவால் இயல்பு வெளவுதல். வௌவுதலாவது பற்றிக் கொள்ளல் ஆகும். அப் பற்றுதல் சரியாக இல்லை எனின் விழுதல் இயல்பு. அம்பு = அப்பு. அப்புதல் = பற்றிக் கொள்ளுதல். உருவி = தவறி விழுந்து.

இ-ம் :

வாழைக் குலை சாய்வதேன்? மாதர் கொண்டை முடிப்பதேன்?

(72)

சீப்பிட்டு சீப்பிட்டு

=

வி-ம் : வாழை குலை தள்ளி அதிலுள்ள சீப்புகள் மிகுந்து முற்றிப் போனால் கனம் தாழாமல் சாய்ந்துவிடும். சீப்பு வாழைப் பழ அடுக்கமைப்பு.

L

(73)

மாதர் = மகளிர். கூந்தலை முடிப்பதற்கு மகளிர் சீப்பை எடுத்துச் சீவுதல் வழக்கம். கூந்தல் வாரும் சீப்பு அது. இ-ம் :

விநாயகனைத் தொழுவதேன்?

வெள்ளாடு வளர்ப்பதேன்?

குட்டி கொண்டு குட்டி கொண்டு

வி-ம் : விநாயகனைத் தொழுபவர் தோப்புக்கரணம் போட்டுத் தலையில் கையால் குட்டிக் கொள்வது வழக்கம். அதனைக் குறித்தது முன்னது.

வெள்ளாடு வளர்ப்பவர் அவ்வாறு குட்டிபோட்டுப் பெருகினால் பணம் சேரும் என்னும் விருப்பாலே வளர்ப்பது வழக்கம். குட்டி கொண்டு = குட்டி பெற்றுப் பெருக வேண்டும் என்பது எண்ணி.

(74)