உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வி-ம்: மோடு = முகடு. வளை பரப்பிய முகடுகள் வானம் பாராது மறைக்கப்பட வேண்டுமானால் ஓடு பரப்பி வேயப்பட வேண்டும் என்பது முன்னது.

மோர்க்குடம் கீழே ஒழுகிப் போவதானால் அக் குடத்தில் டை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது பின்னது.

இடம்:

வக்கா பட்சி பறப்பதேன்?

மாற்றான் கழுத்தை அறுப்பதேன்?

(68)

கத்தி கொண்டு கத்தி கொண்டு

வி-ம் : வக்கா என்னும் பறவை ஒலி செய்து கொண்டே பறக்கும். கத்தி = ஒலித்து.

=

மாற்றான் = பகைவன். பகைவனை அழிக்க நினைப் பவன் கத்தியால் அவன் கழுத்தை அறுத்துக் கொல் வான் என்பது பின்னது. கத்தி = கருவி.

(69)

இ-ம் :

வடகம் உலகில் இடுவதேன்?

வந்த படைகள் ஓடுவதேன்?

- வங்காரமிட்டு வங்காரமிட்டு

வி-ம் : வடகம் என்பது வெங்காயம் கடுகு முதலிய வற்றை - காரச் சரக்குகள் சிலவற்றை இட்டு அரைத்துக் காயவைத்துச் செய்யப்படும் தொடுகறி.

சண்டைக்கு வந்த படைகள் வலிய படைமுன் நிற்கமுடியாமல் புறமுதுகு காட்டினால் பேரொலி செய்து கொண்டு ஓடுவர். வங்காரம் = வலிய ஒலி.

இ-ம்:

வரகு சோறு சமைப்பதேன்?

வானோர் முனிவர் துதிப்பதேன்?

(70)

அரிசிவந்தான் அரிசிவந்தான்

வி-ம் : வரகு என்பது ஓர் உணவுப்பயிர். அதில் கதிர் உண்டாகி மணிபிடித்தால் அதனைச் சோறாக்கி உண்பர். வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்” என்பது ஒளவையார் பாட்டு.

66

66

“அரிசி வந்தால்” இறுதி லகரம் னகரம் ஆயது.