உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

இ-ம்:

முதுகு நீர் ஊத்துவதேன்?

85

முழுப்புண் ஆறுவதேன்?

சீமந்தத்தால் சீமந்தத்தால்

வி-ம்:சீமந்தம் என்பது கருவுற்ற மகளிர்க்கு ஆறாம் மாதத்தில் உச்சிஎடுத்து, முதுகில் நீர் சொரியும் நிகழ்வைக்குறிப்பதாகும்.

து

ஒரு புண் முழுவதாக ஆறிவிட்டது என்பதற்கு அடையாளம் உள்ளிருந்து நீர், சீழ்ஆயவை வருதல் இன்றிநின்றுவிடல் வேண்டும். சீ(ழ்) மந்தம் = சீழ் இல்லாமல் போதல்.

இடம் :

மூடன் கற்றோன் ஆவதேன்?

முழுப் புடவை நெய்வதேன்?

(65)

நூல் மிகுத்து நூல் மிகுத்து

வி-ம்: அறியாமை உடையவனும் அக்கறையுடன் முயன்று பல நூல்களைக் கற்றால் அறிவாளியாகி விடுவான் இது, அறிவுநூல் மிகுதியாகக் கற்பதால் உண்டாவது.

ஆடைநூல் மிகுதியாக இருந்தால் முழுப் புடவை என அந் நாளில் சொல்லப்பட்ட 16 முழப் புடவை நெய்து விடலாம் என்பது. மிகுத்து = மிகுதியாகி.

(66)

இ-ம் :

மேதினி எங்கும் செழிப்பதேன்?

மெய்யெல்லாம் கொப்பளிப்பதேன்?

மாரியினால் மாரியினால்

வி-ம் : உலகம் எல்லாம் விளைவுமிக்க வளம் சிறக்கக் காரணமாக இருப்பது மழையே (மாரியே ஆகும். மாரி அல்லது காரியம் இல்லை என்பது முன்னோர் சொல். அதனைச் சொல்வது முன்னது.

மெய்=உடல். உடலெல்லாம் கொப்புளம் கொள்வது அம்மை எனப்படும் மாரியாலேயாம். அம்மையை மாரியம்மை என்பர். மழையின்றி வெப்பும் குருவும் தொடர என்பது சிலப்பதிகாரம்.(67) இ-ம் : மோட்டு வளைகள் மறைவதேன்?

மோர்க்குடம் அடியில் ஒழுகுவதேன்?

ஓட்டையிட்டு ஓட்டையிட்டு