உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பெட்டி சேர்ப்பதற்கு மூலப் பொருளாகிய பலகையை அளவாக எடுத்து இழைத்துச் சேர்மானம் செய்து ஆணி அடிப்பர். ஆதலால் இரண்டும் ஆணி வைக்கப்படும் என்பதாம்.

இ-ம்:

மத யானை நடப்பதேன்?

(61)

வயலில் தண்ணீர் பாய்வதேன்?

தோட்டியினால் தோட்டியினால்

வி-ம் : மதயானை அடங்காமல் செல்லும். பாகன் அங்குசம் எனப்படும் தோட்டி கொண்டு அதன் போக்கைக் கட்டுப்படுத்தி நிறுத்துவான். தன்னியல்புக்கு வந்து கட்டுப்படச் செய்வது தோட்டியே யாகும்.

தோட்டி என்பது கால் வரத்துத் தண்ணீரைக் கணக்கிட்டு வயலுக்குப் பாய்ச்சும் கரை காவலன் பெயர் ஆகும். அதனைக் குறிப்பது பின்னது.

(62)

இடம்:

மாடு கறப்பதேன்?

மல்யுத்தம் பண்ணுவதேன்?

மடிபிடித்து மடிபிடித்து

வி-ம் : மாட்டில் பால் கறக்க வேண்டுமானால் அதன் மடியை - மடுவைப் பிடித்துக் கறக்க வேண்டும். மடி என்பது காம்பு ஆகும். மற்போர் செய்வா ரும் அப்போரில் கால் கைகளை மடித்தல் பிடித்தல் வகைகளைக் கையாள்வர். மடி பிடித்தல் மடக்கு தலும் பிடித்தலும் மடி பிடித்து எனப்படும். இ-ம்:

முக்காற் பணம் முழுப்பணம் ஆவதேன்? மொண்டிமாடு தண்ணீர் குடிப்பதேன்?

(63)

- கால்கூடி கால்கூடி

வி-ம் : முக்கால் என்பது முழுமையாகிய ஒன்று ஆக வேண்டும் எனின் இன்னும் கால் சேர வேண்டும். கால் பணம் கூடினால் முக்கால் பணம், முழுப்பணம் ஆகிவிடும்.

மொண்டி என்பது நொண்டி. மோனை கருதிக் கொச்சை வடிவாகியது. இவ்வாறு வேறு இடங்களிலும் உண்டு. நடவா மாடாகிய நொண்டி மாட்டின் கால் வலியோ முடமோ சரியாகி விட்டால் நடந்து போய்த் தண்ணீர் குடிக்கும். கால், உறுப்பு.(64)