உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

83

இன்னார் களவு செய்தார் என்பது புலப்படாத போது மந்திரவாதிகளிடம் சென்று குறிகேட்டுக் கண்டுபிடித்தல் என ஒரு வழக்கம் உண்டு. அதனைக் குறிப்பது பின்னது. இ-ம்:

பானைச் சாதம் குறைவதேன்?

பாரில் தண்ணீர் மொள்ளுவதேன்?

(58)

தோண்டியிட்டு தோண்டியிட்டு

வி-ம் : பானையில் உள்ள சோற்றைத் தோண்டி (அள்ளி) வழங்கினால் குறையத்தானே செய்யும் பானையில்! எடுக்க எடுக்கக் குறையாமல் நிறையவா செய்யும் சோற்றுப் பானை? ஊற்றாக இருந்தால் மணலையோ மண்ணையோ தோண்டத் தோண்ட நிலத்தடி நீர் ஊறும். ஊ தோண்டி என்னும் கலையத்தைப் போட்டுத் தண்ணீரை முகந்து பயன்படுத்த லாம். தோண்டுதல், வினை; தோண்டி, பெயர் (கலையம்).

இ-ம் :

புருடரைப் பெருமைப் படுத்துவதேன்?

பூசாரி பிச்சை எடுப்பதேன்?

(59)

உடுக்கையினால் உடுக்கையினால்

வி-ம்:ஆள்பாதி ஆடைபாதி என்பது பழமொழி. பொருந்திய உடை பொலிவை மிகப்படுத்தும் என்பது முன்னது உடுக்கை என்பது உடை. பின்னுள்ள உடுக்கை உடுக்கு ஆகும்.

உடுக்கடித்துப் பாடிக் கொண்டு இருப்பதைக் காண்பவர் காசு போடும் வழக்கத்தை நினைவூட்டு வது பின்னது.

பூசை செய்பவர் இதனைச் செய்யார். இவர் பூசாரி பாடும் பாட்டுப் பாடுவார்.

(60)

இ-ம்:

பொன் மாற்றுப் பார்ப்பதேன்?

பொட்டி பலகை சேர்ப்பதேன்?

ஆணிவைத்து ஆணிவைத்து

வி-ம் -ம் : பொன்னின் தர மதிப்பீடு மாற்று எனப்படும். மதிப்பீடு செய்து அதற்கு அடையாளமாக‘ஆணி’ அடையாளம் (முத்திரை) இடுவர். அப் பொன் ஆணிப் பொன் எனப்படும். அப்பொன் மாற்றுக் குறையாததாகும்.