உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

இறைக்கும் ஏற்றத்தைத் தாங்கும் தூணின் இரு பக்கமும் மடல் உண்டு. அம் மடலில் உள்ள துளையில் ஏற்றச் சட்டம் தாங்கி நிற்கும். மடல் விரிந்து விட்டால் ஏற்றம் சாய்ந்து போகும்.

(55)

இ-ம் :

பாம்பு ஓடுவதேன்?

பாறை இடிவதேன்?

அடிப்பாரற்று அடிப்பாரற்று

வி-ம்: பாம்பு அச்சமின்றிப் போய்க் கொண்டிருந் தால் அதனை அடிப்பவர் இல்லை என்பது பொருளாம். அடிப்பவர் இருந்தால் மறைந்து பதுங்கிவிடும். அடிப்பார் + அற்று.

L

பாறை இடிய வேண்டுமானால், அதன் அடிப்பகுதி அற்றுப் போயிருக்க வேண்டும். அப்படிப் போயிருந்தால்தான் இடிந்துவிழும். பாறை என்பது 'பார்' எனப்பட்டது. இ-ம்:

பாரிற் பெட்டி திறப்பதேன்? பயிர்செய் குடிகள் நைவதேன்?

(56)

சாவியினால் சாவியினால்

வி-ம் : பெட்டியைத் திறப்பதற்கு வேண்டும் கருவி திறவு கோல் எனப்படும் சாவி. ஒவ்வொரு பூட்டுக்கும் அதற்குரிய சாவி போட்டுத் திறத்தல் வேண்டும் என்பதற்கே தனித்தனி உருவாக்கம் செய்கின்றனர். இங்கே சாவி திறவு கோல்.

பயிரில் சாவி என்பது பயிர் கதிர்விட்டு, கதிர்மணி பிடியாமல் செத்துப் போவதாகும். மணி பிடியா மையைச் சாவி என்பது உழவர் வழக்கம். மணியில்லாக் கதிர் கண்ட உழவன் வருந்தாமல் இருப்பானா?

(57)

இ-ம் :

பாற்கடலன்று கடைவதேன்? பாரிற் களவு பிடிப்பதேன்?

மந்தரத்தால் மந்தரத்தால்

வி-ம் : தொன்மத்தில் (புராணத்தில்) பாற் கடல் கடைந்த கதை சொல்லப்படும். பாற் கடலைக் கடைய மந்தரம் என்னும் மலையை மத்தாகக் கொண்டதாகக் கூறுவர். அதைக் குறிப்பது முன்னது.