உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

81

கலம் = ஒரு முகத்தல் அளவு. 12 மரக்கால் அளவு அது. படி அல்லது நாழி என்பது நான்கு கொண் டது மரக்கால் ஆதலால் 48 படி பிடிக்கும் பை - கோணிப்பை - கலப்பை ஆகும்.

இ-ம் :

நொண்டி நடந்து போவதேன்?

மண்டி யெடுப்பதேன்?

(52)

- மரக்காலையிட்டு மரக்காலையிட்டு

வி-ம் : கால் முடமாகிப் போதல் நொண்டி எனப் படும். அத்தகையவர்க்கு மரத்தால் கால்போல் செய்து, உள்ள காலொடு பொருத்தி நடையிடச் செய்வது வழக்கம். மரம்+கால்=மரக்கால்.

L

-

களத்தில் இருந்து நெல்லை மூட்டையாக்குவதற்காக அளப்பவர் மண்டிக்கால் போட்டு காலை மடக்கிக் குந்தியிருந்து அளத்தல் வழக்கம். அளக்கும் கருவியின் பெயர் மரக்கால் ஆகும்.

இ-ம் :

பசுவின் பால் கெடுவதேன்?

பாரில் கூடம் குவிவதேன்?

(53)

கையையிட்டு கையையிட்டு

வி-ம் : பசுவின் பால் தூயதாக இருந்தாலும் அது வைக்கப் பட்ட கலத்தின் தூய்மைக் குறைவாலோ, அதற்குள் விடும் கையின் தூய்மைக் குறைவாலோ பால் கெட்டுப் போதல் உண்டு. அதனைக் குறிப்பது முன்னது.

கூரை வீடு கட்டுபவர் மேலே கூடம் அமைப்பதற்குக் கைம் மரம் அல்லது வளைக்கை வைப்பர். அதன் மேல் கம்பு வரிச்சுக் கட்டி வேய்வர். இதற்குப் பயன் கை வளை அல்லது கைம் மரம் என்பதாம்.

இ-ம் :

பறிக்கும் அரும்பு மணப்பதேன்? இறைக்கும் ஏற்றம் விழுவதேன்?

(54)

- மடல் விரிந்து மடல் விரிந்து

வி-ம் : அரும்பு நிலையில் மணம் இருப்பினும் வெளிப் படாது. இதழ் (மடல்) விரிந்தால் மணம் வெளிப்பட்டுக் காற்று வழியே பரவும்.