உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

மேகம் என்பதற்கு மழை பெய்யும் மேகம் என்னும் பொருளும் உண்டு. நாட்டில் மழை பெய்து வளமும் வாழ்வும் சிறப்பது அந்த மேகத்தாலேயே ஆகும். மேகச் சிறப்பே வான்சிறப்பு என்பதாம். (49)

இடம் :

தேரோடுவதேன்?

திண்ணை மெழுகுவதேன்?

அச்சாணியிட்டு அச்சாணியிட்டு

வி-ம் : தேர் எவ்வளவு பெரியது சிறியது எனினும் அது, நகர்வதற்கு அச்சாணி (அச்சு ஆணி) வேண்டும். அச்சாணி ல்லாத வண்டி முச்சாணும் ஓடாது என்பது பழமொழி.

பழங்கால வீடுகளின் தளம், திண்ணை ஆகியவை மண்ணால் அமைந்தவை. அவற்றின் வலுக் குறையாமல் இருக்க, பசுச் சாணமோ, காளையின் சாணமோ இட்டு மெழுகுவது பழக்கம். அ + சாணி = அச்சாணி. இடுதல் இரண்டற்கும் பொது. இ-ம் : நாட்டிற் பஞ்சாங்கம் திரிவதேன்?

பாட்டும் சுற்றும் வருவதேன்?

(50)

பார்ப்பாரையிட்டு பார்ப்பாரையிட்டு

வி-ம் : நாள் கோள் பார்த்துக் கணிப்பவரைப் பார்ப்பார், பார்ப்பனர் என்றனர். சோதிடம் பார்ப்ப வர், குறிபார்ப்பவர் என்பதே வழக்கம். பார்ப்பவரைப், பார்ப்பனர் என்றனர். பின்னர் சாதிப் பெயராக்கப் பட்டது.

பஞ்சாங்கம் நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் அதனைப் பார்ப்பவர் இருப்பதேயாம். அவ்வாறே பாட்டு ஆராய்ந்து பார்ப்பதும் நாடுகண்டு சுற்றிப் பார்ப்பதும் பார்ப்பவர் இருப்பதா லேயே ஆகும்.

(51)

இ-ம்:

நாட்டில் உழவு நடப்பதேன்?

மூட்டை ஒருவன் எடுப்பதேன்?

கலப்பையாலே கலப்பையாலே

வி-ம் : நாட்டில் உழவுத் தொழில் நடப்பது கலப்பை எனப்படும் ஏராலேயே ஆகும். ஏர்க் கலப்பை என்பதும் அதன் பெயரே. மண்ணை உழுது கலக்கச் செய்யும் கருவி கலப்பையாயிற்று.