உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

இருசொல் அழகு

79

முடி ஒன்றோடு ஒன்று சேர்வது அழுக்குப் பிடிப்ப தாலே யாகும். சிக்கு என்பது அழுக்கு சீப்பு, போட முடியாது. சிக்கு வாரியாலும் எடுக்க முடியாமல் சடையாகிவிடும்.

இ-ம்:

திருப்பதி மலைக்குப் போவதேன்?

(46)

6

தேவதாசி என்றாவதேன்?

படியேறி படியேறி

வி-ம் : திருப்பதிக் கோயிலுக்குப் போக வேண்டு மானால் மலையில் உள்ள படிகளில் ஏறியே ஆக வேண்டும். மகிழ்வுந்து போன்றவற்றில் சென்றாலும் கோயிலுக்குள் போக, படியேறியே ஆக வேண்டும்.

தேவதாசி என்பவர் கோயில் பணியாளர். அவர்கள் தேவ அடியார் எனவும் பட்டனர். பின்னர் அச் சொல்லே பெரும் பழிச் சொல்லாகிவிட்டது! அவளை விரும்பியவர் படிகளில் ஏறியமையால் அப்பழி யாயிற்று.

இ-ம்:

தும்பிக்கையானைத் தொழுவதேன்?

கம்பத்து ஏர்கள் உழுவதேன்?

(47)

-கொழுக் கட்டையிட்டு கொழுக் கட்டையிட்டு

L

வி-ம் : தும்பிக்கையான் = மூத்த பிள்ளையார்; பிள்ளையார் என்பவரும் அவர். அவரைத் தொழுவார், கொழுக்கட்டை செய்து படைப்பர். அவர்க்கு விருப்பமானது என்றும் கூறுவர். மதுரையில் முக்குறுணிப் பிள்ளையார் என ஒரு பிள்ளையார். அவர்க்கு 18 லிட்டர் அரிசியில் ஒரு கொழுக்கட்டை செய்து ர் படைப்பர்.

கம்பம் = தடி, ஏர்க்கால். ஏர்க்காலில் கலப்பைக் குத்தியும், அக்கலப்பைக் கத்தியில் கொழு எனப்படும் இரும்புக் கம்பியும் இருக்கும். கொழுவும் கட்டையும் கொழு, கட்டை.

இ-ம் :

தேகத்தில் நோயுற்று மெலிவதேன்? தேசத்தில் மழைபெய்து சிறப்பதேன்?

(48)

மேகத்தால் மேகத்தால்

வி-ம் : தேகம் = உடல். மேகம் என்பது ஒருவகை நோய். மேகநோய் எனப்படும். அந் நோயுடையவர் உடல் தேறாமல் மெலிந்து தொல்லைப்படுவர்.